Home /News /puducherry /

அடிப்படை வசதிகளை செய்து தந்தால் 100 தோப்புக்கரணம்.. அமைச்சரை ஆச்சரியப்படுத்திய மூதாட்டி

அடிப்படை வசதிகளை செய்து தந்தால் 100 தோப்புக்கரணம்.. அமைச்சரை ஆச்சரியப்படுத்திய மூதாட்டி

அமைச்சரை அசரவைத்த மூதாட்டி

அமைச்சரை அசரவைத்த மூதாட்டி

புதிய திட்டம் தொடங்கி வைக்க வந்த அமைச்சரிடம் 100 நாள் வேலை செய்தும் சம்பளம் வழங்கப்படவில்லை என்று முறையிட்டனர்.

புதுச்சேரியில் கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து தந்தால் 100 தோப்புக்கரணம் போடுவதாக அமைச்சரிடம் மூதாட்டி  கூறி ஆச்சரியப்படுத்தினார்.

புதுச்சேரி அரசு பேட்கோ நிதியின் மூலம் ஊசுடு தொகுதி வள்ளுவன்பேட் கிராமத்தில் ரூ.35 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி தொடங்கியது. இதற்கான பூமி பூஜையை குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்சரவணன்குமார்  செய்து  தொடக்கி வைத்தார்.

முன்னதாக பூஜைக்கு வந்த அமைச்சரிடம் கிராமத்து பெண்கள்,எங்கள் ஊர் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி கிடைக்கிறது. குறிப்பாக சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கு என நேரில் அழைத்து சென்று காண்பித்தனர். இதனை சரி செய்து தர வேண்டும், 100 நாள் வேலை செய்தும் சம்பளம் வழங்கப்படவில்லை என்று அமைச்சரிடம் முறையிட்டனர். அதற்கு அமைச்சர், என்னை நீங்கள் வேலை வாங்கிக் கொள்ளுங்கள், அதற்கு தான் நான் இருக்கிறேன் என்று அவரிடம் கூறினார்.

இதையும் படிங்க: ம.பி.யில் பயங்கரம்: 7 வயது சிறுவனை உயிருடன் விழுங்கிய ராட்சத முதலை - கிராமத்தினர் கடும் கோபம்

இதற்கு ஒரு மூதாட்டி எங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து தந்தால் உங்களுக்கு 100 தோப்புக்கரணம் போடுவதாகக் கூறினார். மூதாட்டியின் பேச்சை கேட்டு அசந்து போன அமைச்சர் அவருக்கு கை கூப்பி நன்றி தெரிவித்தார்.
Published by:Kannan V
First published:

Tags: Lack of road facility, Minister, Pudhucherry

அடுத்த செய்தி