Home /News /puducherry /

தோஷம் நீக்குவதாக கூறி ரூ.12 லட்சம் அபேஸ்.. சிக்கிய பெண் சாமியார்

தோஷம் நீக்குவதாக கூறி ரூ.12 லட்சம் அபேஸ்.. சிக்கிய பெண் சாமியார்

தோஷம் நீக்குவதாக மோசடி

தோஷம் நீக்குவதாக மோசடி

Puducherry : புதுச்சேரி மாநிலத்தில் தோஷம் நீக்குவதாக கூறி நகைகள் மற்றும் ரூ.12 லட்சம் வரை பணமோசடியில் ஈடுப்பட்ட பெண் சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெயர் தான் சத்தியவதி ஆனால் செய்தது அனைத்தும் பிராடு வேலைகள். குடும்பத்திற்கே தோஷம் உள்ளது என்று கூறி ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் 37 சவரன் நகைகளை ஆட்டையை போட்டவர் சிக்கியுள்ளார்.

புதுச்சேரி மாநிலம் கோரிமேடு இந்திரா நகர் பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் முருகன். இவரது வீட்டின் மாடியில் வாடகைக்கு 2020ஆம் ஆண்டு சத்தியவதி என்பவர் இரண்டு மகள்களுடன் குடிவந்துள்ளார். அனைவருடன் நட்பாக பழகியுள்ளார். முருகனின் அக்கா உமாமகேஸ்வரி தனது 16 வயதில் இறந்து விட்டார். தனது அக்காவின் புகைப்படத்தை முருகன் வீட்டில் வைத்திருந்தார்.

இதைப்பார்த்த சத்தியவதி உங்கள் வீட்டில் தோஷம் இருக்கிறது. தோஷத்தை போக்கினால் தான் நீங்கள் அனைவரும் நன்றாக இருக்க முடியும் என்று முருகனின் மனைவி லட்சுமியிடம் கூறியிருக்கிறார். வீட்டில் உள்ள பெண்கள் மட்டுமே இந்த தோஷத்தை கழிக்க வேண்டும். ஆண்களுக்கு தெரியக்கூடாது என்று முருகனின் தாயார் மற்றும் மனைவி லட்சுமி ஆகியோரிடம் கூறியிருக்கிறார்.

தோஷத்தை தானே நீக்குவதாகவும் தனக்கு அனைத்து பூஜைகளும் தெரியும் எனக் கூறி படிப்படியாக பணத்தை அவர்களிடம் இருந்து வாங்கி உள்ளார். பணம் கொடுத்த விவகாரம் ஆண்களுக்கு தெரியக்கூடாது. தெரிந்தால் அவர்கள் இறந்து விடுவார்கள் என்றும் மிரட்டியுள்ளார். பூஜை செய்வதாக கூறி லட்சுமியின் மகளுக்கு சூடும் வைத்தார் சத்யவதி.

இதனால் கையில் இருந்த 7 லட்சம் ரூபாய், உறவினர்களிடம் வாங்கிய 5 லட்சம் ரூபாய் மற்றும் 37 சவரன் நகைகளை படிப்படியாக இருவரும் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் முருகனின் தந்தை துரைராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு முன்பு இறந்து விட்டார்.



கருமாதிக்கு வரும் பணத்தை கூட வீட்டு செலவுக்கு பயன்படுத்த கூடாது. தோஷமாகி விடும் எனக்கூறிய சத்யவதி, அந்தப்பணத்தையும் வாங்கியுள்ளார். இறுதி சடங்கிற்கு வந்த உறவினர்கள் சிலர் முருகனிடம் மனைவி லட்சுமி, தாயார் லலிதாம்பிகை ஆகியோர் பலரிடம் கடன் வாங்கி இருப்பதை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போதுதான் சத்தியவதி தோஷத்தை நீக்குவதாக கூறி பணம் பறித்த தகவல் முருகனுக்கு தெரியவந்தது. உடனே புதுச்சேரி தன்வந்தி நகர் காவல் நிலையத்தில் இந்த விவகாரம் பற்றி புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, சத்தியவதியை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

Must Read : வேலூரில் பைக்குக்கும் சேர்த்து போடப்பட்ட ரோடு: மீண்டும் ஒரே நாள் இரவில் அகற்றம்- பொதுமக்கள் மீண்டும் ஷாக்

வீட்டில் இருக்கும் இறந்தவரின் படத்தை வைத்து வீட்டிற்கு தோஷம் இருப்பதாக கூறி பெண் போலி சாமியார் மோசடி செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Suresh V
First published:

Tags: Arrested, Crime News, Fraud, Puducherry

அடுத்த செய்தி