Home /News /puducherry /

விவசாயி தோட்டத்தில் 5 அடி நீள முருங்கை காய் தரும் மரம்..

விவசாயி தோட்டத்தில் 5 அடி நீள முருங்கை காய் தரும் மரம்..

விவசாயி தோட்டத்தில் 5 அடி நீள முருங்கை காய் தரும் மரம்..

விவசாயி தோட்டத்தில் 5 அடி நீள முருங்கை காய் தரும் மரம்..

இயற்கை முறையில் பயிர் பாதுகாப்பு செய்யப்பட்டு வரும் இந்த முருங்கை 5 அடி நீளமுள்ள காய்கள் காய்த்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

    புதுச்சேரியின் சுத்துக்கேணி கிராமத்தில் விவசாயி ஒருவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள முருங்கைமரத்தில் 5 அடி நீள முருங்கை காய் காய்த்து அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த முருங்கையில் இருந்து பதிவு போட்டு அனைவருக்கும் வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரியின் சுத்துக்கேணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர். விவசாயியான இவர் தன்னுடைய நிலத்தில் கரும்பு, நெல், மரவள்ளி உள்ளிட்டவை பயிரிட்டு வருகிறார்.  அவரது வீட்டு தோட்டத்தில் தோட்ட பயிராக முருங்கை மரம் வைத்துள்ளார். இந்த முருங்கை இயற்கை முறையில் தொழுஉரம், புண்ணாக்கு உள்ளிட்டவை வைத்து பராமரித்து வருகிறார். இதில் தற்போது காய்காய்க்கும் சீசன் என்பதால் காய்கள் காய்த்து உள்ளன.

    இதில் குறிப்பிடத்தக்க அம்சம் ஒவ்வொரு காயும் குறைந்தபட்சம் 5 அடி நீளம் உள்ளது. இது அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சாதாரணமாக ஒரு முருங்கைக்காய் ஒரு அடி ஒன்றரை அடி தான் இருக்கும். ஆனால் ஞானசேகரன் தோட்டத்தில் இருக்கும் முருங்கைக்காய் 5 அடி நீளம் இருப்பதால் அதனை அப்பகுதி மக்கள் அதிசயமாக பார்த்து செல்வதுடன் தங்களுக்கு இந்த முருங்கை மரத்திலிருந்து பதிவு போட்டு தருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுகுறித்து விவசாயி ஞானசேகர் கூறுகையில், இயற்கை முறையில் பயிர் பாதுகாப்பு செய்யப்பட்டு வரும் இந்த முருங்கை 5 அடி நீளமுள்ள காய்கள் காய்த்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அனைவரும் வந்து இதனை ஆச்சரியத்துடன் பார்த்து செல்வதாகவும் இந்த மரத்திலிருந்து பதிவு போட்டு தங்களுக்கு தருமாறு கேட்டு செல்வதாகவும்  தெரிவித்தார்.

    சுத்துகேணி கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், முருங்கை என்றால் ஒரு அடி இரண்டடி தான் இருக்கும் சற்று வித்தியாசமாக ஞானசேகர் தோட்டத்தில் இருக்கும் முருங்கை 5 அடி நீளம் இருப்பதாகவும் இதனை அனைவரும் அதிசயத்துடன் பார்த்து செல்வதாக கூறினார்கள்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Puducherry

    அடுத்த செய்தி