ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

8ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை... புதுச்சேரியில் காவலாளி போக்சோவில் கைது...

8ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை... புதுச்சேரியில் காவலாளி போக்சோவில் கைது...

போக்சோ கைது

போக்சோ கைது

எட்டாம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி காவலாளி கைது செய்யப்பட்டார். மாணவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசின் ஜவகர் நவோதயா வித்யாலயா இயங்கி வருகிறது. இங்கே மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் பத்தாண்டுகளாக காவலாளியாக பணிபுரிந்து வரும் தரங்கம்பட்டியை சேர்ந்த முகமது அலி நேற்று வழக்கம்போல மாணவர்களை அதிகாலையில் எழுப்ப சென்றுள்ளார். அப்போது அங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மாணவன் அலறி அடித்து எழுந்திருக்கவே சக மாணவர்களும் விழித்துக் கொண்டனர். உடனடியாக  மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு வந்த மாணவர்களின் பெற்றோர் மாணவனை சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டுச்சேரி போலீசார் முகமது அலியை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Pocso, Puducherry, Sexual harrasment