ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

காவல்துறையை நவீனப்படுத்த 63 கோடி ரூபாய் தேவை.. உள்துறை அமைச்சர் மாநாட்டில் அமைச்சர் நமச்சிவாயம் வலியுறுத்தல்

காவல்துறையை நவீனப்படுத்த 63 கோடி ரூபாய் தேவை.. உள்துறை அமைச்சர் மாநாட்டில் அமைச்சர் நமச்சிவாயம் வலியுறுத்தல்

புதுச்சேரி மாநாடு

புதுச்சேரி மாநாடு

Puducherry | புதுச்சேரி காவல்துறையை நவீனப்படுத்த ரூ 63 கோடி நிதி வழங்க உள்துறை அமைச்சர் மாநாட்டில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வலியுறுத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

சைபர் குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் விவகாரங்கள் குறித்து விவாதிக்க அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு இரண்டு நாள்கள்  நடக்கிறது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள்  பங்கேற்றனர். மாநாட்டில் மாநில உள்துறை செயலர்கள், டிஜிபிக்கள், ஆயுதப்படை இயக்குனர்கள், மத்திய போலீஸ் அமைப்புகளும் பங்கேற்றனர்.

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமை செயலர் ராஜீவ்வர்மா, டிஜிபி மனோஜ்குமார் லால் ஆகியோர் பங்கேற்றனர்.  அப்போது மாநாட்டில் பேசிய  உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ”புதுச்சேரி காவல்துறையை நவீனப்படுத்த ரூ.63 கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். காவல்துறைக்கு தேவையான  பணியாளர்கள் நியமிக்க மத்திய உள்துறை அனுமதி வழங்க வேண்டும். புதுச்சேரியின் 4 பிராந்தியங்களும் கடலோர பகுதியை உள்ளடக்கியவை. எனவே புதுச்சேரி கடலோர பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

அதனால் கடலோர காவல்படையை விரிவுபடுத்த வேண்டும். கடலோர காவல்படையில் ஊர்க்காவல்படையினரை நியமிக்க வேண்டும். போதை, கடத்தல் நாடு முழுவதும் பிரச்சினையாக உள்ளது. புதுச்சேரியில் போதை தடுப்பு தனி பிரிவை பலப்படுத்த வேண்டும்" என்றார்.

Also see...கோவிலுக்குள் வணிக கடைகளை அனுமதிக்க முடியாது - நீதிமன்றம்

மேலும் “சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் பிரிவை நவீனப்படுத்தி குற்றவாளிகளை கண்டறிய அதி நவீன கருவிகளை வழங்க வேண்டும்” என அமைச்சர் நமச்சிவாயம் பேசினார். இன்று வெள்ளிக்கிழமை  நடைபெறும் 2ம் நாள் மாநாட்டில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Minister, Police, Puducherry