ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

காரைக்கால் கோயில் திருவிழாவில் நடந்த வெடி விபத்து : 4 சிறுவர்கள் பலத்த காயம்..!

காரைக்கால் கோயில் திருவிழாவில் நடந்த வெடி விபத்து : 4 சிறுவர்கள் பலத்த காயம்..!

Karaikal | காரைக்காலில்  கோவில் திருவிழாவில் நடந்த வெடி விபத்தில் மூன்று சிறுமி உட்பட நான்கு பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karaikal, India

காரைக்கால் அருகே கோயில் திருவிழாவில் வெடிக்காத வெடிகளை சேகரித்து வைத்ததில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிறுமி உட்பட  நான்கு சிறுவர்கள் காயமடைந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி அடுத்த காரைக்கால் மேடு மீனவ கிராமத்தில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. கடந்த ஒரு வாரமாக இந்த கோயிலில் திருவிழா நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவிழாவின் கடைசி நாளை முன்னிட்டு வான வேடிக்கை நிகழ்ச்சி கிராம பஞ்சாயத்தார் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வகைகளான நாட்டு வெடிகள் மற்றும் வானத்தில் வெடிக்கும் நட்சத்திர வெடிகள் வெடிக்கபட்டன. காரைக்கால் மேடு வடக்கு தெருவைச் சேர்ந்த பள்ளி சிறுவர்கள் நான்கு பேரும்  சேர்ந்து வெடிக்காத வெடிகளை அதிக அளவு சேகரித்து அதில் உள்ள வெடி மருந்துகளை கொட்டி விளையாடி கொண்டிருந்துள்ளனர்.

அப்போது  திடீரென வெடிபொருளை வெடிக்க செய்துள்ளனர். இதில் அதிக அளவு மருந்து இருந்தால் வீரியத்துடன்  வெடிகள் வெடித்ததில் அதன் அருகிலேயே இருந்த சிறுவன் நான்கு பேரும் வெடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதில் நான்கு பேருக்கும் கண், கைகள், முகம் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

இதனை கண்ட பகுதி மக்கள் அவர்கள் நான்கு பேரை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் இரு குழந்தைகள் முகம் முழுவதும் வெடி காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கின்றனர். மேலும் இரு குழந்தைகள் கால், கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Also see... பஸ் ஸ்டாபில் நடந்த கல்யாணம்.. வீடியோ வெளியிட்ட நபர் கைது..!

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கோயில் திருவிழாவில் வானவேடிக்கை நடத்த தீயணைப்பு துறையினரிடமும் போலீஸாரிடம் கிராம பஞ்சாயத்து முன் அனுமதி பெறாமல் நிகழ்ச்சியை நடத்தி இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Crackers, Karaikal