ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

புதுச்சேரியில் 300 டன் மரங்கள் வெட்டி கடத்தல்... வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு

புதுச்சேரியில் 300 டன் மரங்கள் வெட்டி கடத்தல்... வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு

300 டன் மரங்களை வெட்டிய மர்ம கும்பல்

300 டன் மரங்களை வெட்டிய மர்ம கும்பல்

Puducherry | மரம் வெட்டியவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை துணை வனக்காப்பாளர் வஞ்சுளவள்ளி (IFS) தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் சேதராப்பட்டு கிராமத்தில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு 800 ஏக்கர் நிலம் 2007 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு தொழிற்சாலையும் வராத நிலையில் இந்த நிலம் பயனற்றுக் கிடக்கிறது. இங்கே விவசாயங்களும் நிறுத்தப்பட்டதன் காரணமாக மரங்கள் ஏராளமாக வளர்ந்துள்ளன. இதனை மர்ம கும்பல் கரசூர், சேதுரப்பட்டு ஆகிய கிராமத்தில் உள்ள மரங்களை கடந்த 20 நாட்களாக வெட்டி வருகிறார்கள். 300 டன் மரங்கள் வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக வனத்துறைக்கு புகார் தெரிவித்ததன் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் நேற்று வந்து பார்வையிட்ட பொழுது அங்கு வெட்டப்பட்ட மரங்களும் டிராக்டர்களும் இருப்பதை பார்த்தனர். அவற்றைப் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். இன்று இரண்டாவது நாளாக மீண்டும் வனத்துறை அதிகாரிகள் வந்தனர்.

வனத்துறை துணை வனக்காப்பாளர் வஞ்சுளவள்ளி தலைமையில் வன அதிகாரிகள், காவல் துறையினர் வெட்டப்பட்ட மரங்களை நேரில் ஆய்வு செய்தனர். கரசூர்,சேதராப்பட்டு பகுதிகளில் வெட்டப்பட்டுள்ள மரங்கள் குறித்து அவர்கள் கணக்கெடுப்பு நடத்தினார்கள். 15 நிமிடத்திற்கு 50 மரங்கள் என எண்களை அவர்கள் குறியிட்டனர். 20 நாட்களுக்கு மேலாக மரங்கள் வெட்டப்பட்டதால் ஆயிரக்கணக்கில் எண்ணிக்கை வரும் என வனத்துறையினர் கருதுகின்றனர்.

மேலும் பெரிய மரம், சிறிய மரம், அரிய வகை மரம் என எதையும் மர்ம நபர்கள் விட்டு வைக்கவில்லை. மரம் வெட்டியவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை துணை வனக்காப்பாளர் வஞ்சுளவள்ளி  தெரிவித்தார்.

மேலும் இத்தனை டன் மரங்களும் எங்கு கொண்டு செல்லப்பட்டது. எப்படி சேதராப்பட்டில் இருந்து கொண்டு செல்லப்பட்டது என துணை வனக்காப்பாளர் விசாரணை நடத்தினார். அப்பகுதியில் உள்ள சிலர் கொதிகளங்கள் உள்ள தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தனர்.

Also see... Gold Rate | மீண்டும் குறைந்தது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன?

இதனையடுத்து அருகில் உள்ள சேதராப்பட்டு தொழிற்சாலைகளில்

காவல் துறையினருடன் வனத்துறை துணை வனக்காப்பாளர் வஞ்சுளவள்ளி தலைமையில் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். அங்கு சில தொழிற்சாலைகளில் புதிதாக வெட்டப்பட்ட மரங்கள் இருந்தன.

இவை அனைத்தும் ஏஜெண்ட்டுகள் மூலமே பெறப்படுவதாக தொழிற்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பதிலில் திருப்தியடையாத அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்த வருவோம் என கூறியுள்ளனர்.

First published:

Tags: Illegally cut trees, Puducherry