முகப்பு /செய்தி /புதுச்சேரி / திருடிய பொருள்களை ஆட்டோவில் எடுத்துச்சென்ற கொள்ளையர்கள்.. சிறுவர்களின் உண்டியலையும் விட்டுவைக்காத கொடுமை

திருடிய பொருள்களை ஆட்டோவில் எடுத்துச்சென்ற கொள்ளையர்கள்.. சிறுவர்களின் உண்டியலையும் விட்டுவைக்காத கொடுமை

புதுச்சேரி கொள்ளை நடந்த வீடு

புதுச்சேரி கொள்ளை நடந்த வீடு

Puducherry | புதுச்சேரி திருக்கனூர் அருகே உள்ள தமிழக பகுதியான  சித்தலம்பட்டில் இரு வீடுகளில் 48 பவுன் தங்க நகை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை  காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி திருக்கனூர் அருகே உள்ள தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட சித்தலம்பட்டு கிருஷ்ணா நகரில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். மதுரையை சேர்ந்த இவர் புதுச்சேரிக்கு 30 ஆண்டுகளுக்கு முன் வந்தவர். இவர் இங்கு முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த இரண்டாம் தேதி மதுரைக்கு புரட்டாசி பொங்கல் திருவிழாவில் கலந்து கொள்ள குடும்பத்துடன் சென்றுள்ளார்.

இந்நிலையில் 7ம் தேதி அதிகாலை மீண்டும் ஊர் திரும்பிய நிலையில் அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து வீட்டிற்குள் சென்று பார்த்ததில் வீட்டில் வைத்திருந்த 28 சவரன் நகை ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களான வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், ஏசி, ஹோம் தியேட்டர் போன்றவற்றை திருடி டாட்டா ஏசி வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளனர்.

மேலும் இதே போன்று அப்பகுதியில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியரான கோதண்டராமன் என்பவர் தனது மகளுக்கு தீபாவளி வரிசை வைக்க ஊருக்கு சென்றுள்ளார். அவரது வீட்டை உடைத்து பத்து சவரன் நகை, 3 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

' isDesktop="true" id="815091" youtubeid="PKs0ChzaKkA" category="puducherry">

இதுகுறித்து கண்டமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கொள்ளை சம்பந்தமாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர். திருட வந்த வீட்டில் டூத் பேஸ்ட், குளியல் சோப்பு, துணி சோப்பு, ஷேவிங் ரேசர், மையல் சிலிண்டர், 5 கிலோ சர்க்கரை, பிஸ்கேட், ஆகியவற்றை டாட்டா ஏசி வாகனத்தில் தில்லாக ஏற்றி சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Also see... பாஜக பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல்...

குழந்தைகளின் சேமிப்பு உண்டலையும் விட்டு வைக்காத கொள்ளையர்கள் அவற்றை உடைத்து சில்லறை காசுகளை எடுத்து சென்றுள்ளனர்.

First published:

Tags: Crime News, Gold Robbery, Puducherry