Home /News /puducherry /

விஷம் வைத்து பள்ளி மாணவன் கொல்லப்பட்ட விவகாரம் - 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட்

விஷம் வைத்து பள்ளி மாணவன் கொல்லப்பட்ட விவகாரம் - 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட்

கொலை செய்த சகாயராணி

கொலை செய்த சகாயராணி

மகளை விட நன்றாக படிப்பதால் மாணவனுக்கு விஷம் கலந்து குளிர்பாணம் வழங்கிய தாய். இந்த விவகாரத்தில், சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டியதால் தான் மாணவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India
    காரைக்காலில் விஷம் கலந்த குளிர்பாணத்தை குடித்த 8ம் வகுப்பு மாணவனுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என எழுந்த புகாரில் 2 அரசு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    கோட்டுசேரி தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவன் பாலமணிகண்டன் தனது மகளை விட நன்றாக படித்ததால், அவருக்கு கடந்த 2ம் தேதி சக மாணவியின் தாய் விஷம் கலந்த குளிர்பாணத்தை கொடுத்தார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    Also Read : மகளை விட நன்றாக படித்த சிறுவனை விஷம் வைத்து கொன்ற பெண்.. காரைக்காலில் அதிர்ச்சி சம்பவம்

    இந்த விவகாரத்தில் மாணவியின் தாய் கைது செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் காட்டியதால் தான் மாணவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை கண்டித்து இன்று காரைக்கால், திருநள்ளாறு, திருமலைராயன்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஆட்டோக்கள், தனியார் பேருந்துகளும் இயக்கப்படவில்லை.

    இந்நிலையில், காரைக்கால் அரசு மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் விஜயகுமார், பாலாஜி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Doctors, Poison, Puducherry

    அடுத்த செய்தி