Home /News /puducherry /

18 அடியில் நித்தியானந்தாவுக்கு சிலை-கும்பாபிஷேகம்... அதிர்ந்துபோன பொதுமக்கள்

18 அடியில் நித்தியானந்தாவுக்கு சிலை-கும்பாபிஷேகம்... அதிர்ந்துபோன பொதுமக்கள்

18 ஆடி உயர நித்யானந்தா சிலை..

18 ஆடி உயர நித்யானந்தா சிலை..

Nithyananda | 18 அடி உயரத்தில் நித்தியானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலை உருவாக்கப்பட்டு பத்துமலை முருகன் மற்றும் நித்யானந்தா உருவம் கொண்ட சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நித்யானந்தாவின் உடல்நிலை பற்றி பல்வேறு தகவல்கள் வந்த நிலையில் தற்பொழுது அவரது சீடர் செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. புதுச்சேரி  அருகே நித்தியானந்தாவிற்கு 18 அடி உயரத்தில் சிலை வைத்து கும்பாபிஷேகம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி குருமாம்பேட் அருகே உள்ள தமிழக பகுதியான பெரம்பை கிராமம் உள்ளது. இங்கு ஐஸ்வர்யா நகரில் நித்தியானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசிய முருகன் கோயில் போல்  கோயிலைக் கட்டி வந்தார். 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு கோயிலிற்கு ஸ்ரீ பத்துமலை முருகன் ஆலயம் என பெயரிடப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதற்கிடையில் கோயிலில் உள்ளே நுழையும் பொழுது 18 அடி உயரத்தில் நித்தியானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலை உருவாக்கப்பட்டு பத்துமலை முருகன் மற்றும் நித்யானந்தா உருவம் கொண்ட சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த சிலையை பார்த்ததும் போலீஸ் அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நித்யானந்தா  சிவன் போல் வேடம் அணிந்து கையில் சூலத்துடன் தோன்றிய காட்சியைப் போல் இந்த சிலை அமைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து கோயிலில் கும்பாபிஷேகம் செய்த சிவாச்சாரியார்களிடம் கேட்ட பொழுது இது சிவனின் மற்றொரு அவதாரமான கால பைரவர் என்று கூறினார்கள். ஸ்தபதி சிலையை முறையாக வடிவம் வடிவமைக்க வில்லை என்று கூறினர். பின்னர் கோயில் நிர்வாகி பாலசுப்பிரமணியன் அறைக்கு சென்று பார்த்த பொழுது அவர் அறை முழுவதும் நித்தியானந்தா அவருக்கு ஆசி வழங்குவதும் நித்தியானந்தா புகைப்படத்தை ஓவியமாக தீட்டி வைத்திருப்பதும் என நிறைய புகைப்படங்கள் இருந்தது.

Read More : போட்டிக்கு நீங்களும் வரலாம்..! 8 கிலோ சமோசாவை 30 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.51,000 பரிசு


ஏற்கனவே நித்தியானந்தா படங்களை வைத்து அவர் பூஜித்து வந்ததும் தெரியவந்தது. பாதுகாப்பு பணிக்கு வந்த ஆரோவில் போலீசார் நித்தியானந்தா சிலையை ஆச்சரியத்துடன் பார்த்தனர். பக்தர்களும் அந்த சிலையின் முன்னாடி நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.கும்பாபிஷேக அழைப்பிதழில் முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் பெயர் இடம் பெற்றிருந்தது. இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் சிவசங்கர் கே.எஸ்.பி ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நித்தியானந்தா சீடர் முருகன் கோயில் கட்டி அங்கு 18 அடியில் நித்தியானந்தா சிலையை நிறுவி கும்பாபிஷேகம் செய்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Nithyananda, Puducherry, Viral

அடுத்த செய்தி