ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

புதுச்சேரி : அரவிந்தர் படம் பொறிக்கப்பட்ட 150 ரூபாய் நாணயம்.. எங்கு பெறுவது?

புதுச்சேரி : அரவிந்தர் படம் பொறிக்கப்பட்ட 150 ரூபாய் நாணயம்.. எங்கு பெறுவது?

அரவிந்தர் படம் பொறிக்கப்பட்ட 150 ரூபாய் நாணயம்

அரவிந்தர் படம் பொறிக்கப்பட்ட 150 ரூபாய் நாணயம்

Puducherry News : அரவிந்தர் படம் பொறிக்கப்பட்ட 150 ரூபாய் நாணயம் புதுச்சேரி ஆசிரமத்திலும் பெற்றுகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

ஆன்மீகம் மற்றும் சுற்றுலாத் தளமான புதுச்சேரிக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை புரிகின்றனர். குறிப்பாக வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருபவர்கள் நிச்சயமாக அரவிந்தர் ஆசிரமத்தில் தியானம் செய்யாமல் போக மாட்டர்கள்.

அந்த அளவிற்கு ஆன்மீக ஈர்ப்பு சக்தி கொண்ட இடமாக திழக்கிறது. இந்திய தேசியவாதியும், மெய்யியலாளரும், ஆன்மிக தலைவரும், கவிஞராக திகழ்ந்தவர் அரவிந்தர். நாட்டின் விடுதலை இயக்கத்தில் இணைந்த இவர் போராட்ட வீரராய் இருந்து ஆன்மிக வாழ்க்கையை மேற்கொண்டார்.

மேலும் 1910ம் ஆண்டு ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்ட அரவிந்தர் புதுச்சேரியில் மிகப்பெரிய ஆன்மீக பணியில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு மிரா அல்ஃபாஸா என்றழைக்கப்படும் அன்னை, அரவிந்தருக்கு உறுதுணையாக இருந்து அவரும் ஆன்மீக பணியை செய்து வந்தார்.

இதையும் படிங்க : புதுவையில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய வாகனம்- பொதுமக்கள் அச்சம்

ஆன்மீக உணர்வோடு சுதந்திர உணர்வுகளை பாரதி உடன் சேர்ந்து வெளிப்படுத்தினார் அரவிந்தர். மேலும் புதுச்சேரி ஒட்டியுள்ள தமிழக பகுதியில் சர்வதேச நகரமான ஆரோவில்-லை உருவாக்கினார் அன்னை.

அங்கு பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் குடியேறி ஆன்மீகத்தில் மீது ஈடுபாடு கொண்டு பணிகளை தற்போதும் செய்து வருகின்றனர். அரவிந்தர் மற்றும் அன்னை மறைந்து இருந்தாலும் நாள்தோறும் அரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள அவர்களது சமாதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் தரிசனம் செய்வது வழக்கம்.

குறிப்பாக அரவிந்தர் மற்றும் அன்னையின் பிறப்பு மற்றும் இறப்பு நாள் அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். சுதந்திர போராட்டம் மற்றும் ஆன்மீகத்தால் ஈர்க்கப்பட்ட அரவிந்தரின் 150-வது பிறந்த நாளையொட்டி தபால் தலை மற்றும் நாணயம் வெளியிடப்பட்டது.

டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தப்படுத்தினார். இதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அரவிந்தரின் உருவம் பொறித்த ரூ.150 நாணயம் அரவிந்தர் ஆசிரமத்திலும், தபால் தலை தபால் நிலையத்தில் கிடைக்கும் என ஆசிரம நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி செய்தியாளர்- பிரசாந்த்

First published:

Tags: Local News, Puducherry