ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

10, 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை - புதுச்சேரி மக்களுக்கு அரிய வாய்ப்பு

10, 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை - புதுச்சேரி மக்களுக்கு அரிய வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

Puducherry News | புதுச்சேரியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை காத்திருக்கிறது. இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அரசு பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில் காலியாக உள்ள ஸ்டோர் கீப்பர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கிளாக் பணி:

காலிப் பணியிடங்கள் : 165

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய ஏதாவதொரு மொழியில் இளநிலை தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஸ்டோர் கீப்பர் பணி :

காலிப் பணியிடங்கள்: 55

தகுதி: 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 29.12.2022 தேதியின்படி 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விண்ணப்பிக்கும் முறை: https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 29.12.2022

Must Raad : கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய பிரமிப்பூட்டும் அழகான சுற்றுலா தலம் - மாத்தூர் தொட்டிப்பாலம்

மேலும், கூடுதல் வவரங்களை https://recruitment.py.gov.in/recruitment/LDCSK2022/notification என்ற இணைதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

First published:

Tags: Employment, Government jobs, Local News, Puducherry