ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

புதுச்சேரி காவல் துறையில் 1092 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி காவல் துறையில் 1092 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் நமச்சிவாயம்

துச்சேரி காவல் துறையில் 1092 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்

துச்சேரி காவல் துறையில் 1092 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்

புதுச்சேரி காவல் துறையில் 1092 பணியிடங்கள்காலியாக இருக்கின்றன. இவை விரைவில் நிரப்பப்படும் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி காவல் துறையில் பணியில் இருந்த போது இறந்தவர்களின் வாரிசு தாரர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இதில் 24 ஆண் போலீஸ், 12 பெண் போலீஸ்க்கு ஒராண்டு பயிற்சி கொடுக்கப்பட்டது. ஆண் மற்றும் பெண் மொத்தம் 36 போலீசாருக்கு கோரிமேடு காவலர் மைதானத்தில் சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. பயிற்சி பெற்ற போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஏற்று கொண்டார்.

போலீஸ் பயிற்சியின் போது சட்டம் ஒழுங்கு படித்து முதல் மதிப்பெண்கள் பெற்ற 14 போலீசாருக்கு சான்றிதழ் மற்றும் பரேடில் சிறந்து விளங்கிய 4 போலீசாருக்கு கோப்பைகளை உள்துறை அமைச்சர் வழங்கினார். புதுச்சேரி காவல் துறையில் 24வது பேட்ச் அணிவகுப்பு விழாவில், டி.ஜி.பி., மனோஜ்குமார்லால், ஏ.டி.ஜி.பி., ஆனந்தமோகன். ஐ.ஜி., சந்திரன். சட்டம் ஒழுங்கு எஸ்.பி.,க்கள் பிரத்திஷா கோத்ரா, தீபிகா, நாரா சைத்தன்யா உட்பட இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசிகையில், “இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு போலீஸ் பணியில் இருக்கும்போது இறந்தவர்களின் வாரிதார்களுக்கு முதல்வர் ரங்கசாமி தலைமையில் பணி ஆணை வழங்கப்பட்டது. இவர்களின் ஒராண்டு பயிற்சி முடித்து காவல் நிலையங்களில் பணி அமர்த்தப்பட உள்ளனர் என்றார்.

Also see...இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம்.. நாளை வழங்குகிறார் பிரதமர் மோடி!

சட்டம் ஒழுங்கு கட்டுப்படுத்துவதிலும், அமைதியை நிலை நாட்டுவதிலும், போதை பொருள் கட்டுப்படுத்துவதிலும், புதுச்சேரி காவல் துறை சிறப்பாக பணியாற்றி வருகிறது. காவல் துறையை நவீனப்படுத்த வேண்டும். உரிய போலீசார் நியமிக்க வேண்டும் என எங்களின் நோக்கம். அதனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு 390 பேர் தகுதி அடிப்படையில் போலீசாராக தேர்வு செய்யப்பட்டு தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 60 சப் இன்ஸ்பெக்டர்கள் பணிக்காக  அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் காவல்துறையில் 356 போலீசார் பணியில் அமர்த்த ஒப்புதல் அனுப்பப்பட்டுள்ளது. இதில் 27 ஓட்டுனர் போலீசார் தேர்வு செய்யப்பட உள்ளனர். காவல் துறையில் 1092 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இவை விரைவில் நிரப்பப்படும். எதிர் காலத்தில் ஊர் காவல் படையை சேர்ந்தவர்கள் பணியில் நியமிக்கப்பட உள்ளனர்” என அமைச்சர் தெரிவித்தார்.

புதுச்சேரியில் சைபர் குற்றங்களை குறைக்க சைபர் காவல்  நிலையங்கள் அமைக்க ஏற்பாடு நடக்கிறது என்றும் அமைச்சர்  நமச்சிவாயம் கூறினார்..

Published by:Vaijayanthi S
First published:

Tags: Job, Police, Puducherry