மதுக்கடைகளை விரைவில் திறக்க புதுச்சேரி அரசு முடிவு!

கடலூர், விழுப்புரம் மாவட்டம் சிவப்பு மண்டலமாக உள்ளது.

மதுக்கடைகளை விரைவில் திறக்க புதுச்சேரி அரசு முடிவு!
புதுச்சேரி முதல்வர் நாராய ணசாமி
  • Share this:
மதுக்கடைகளை விரைவில் திறக்க புதுச்சேரி அரசு முடிவு எடுக்கும் என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். 

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் . அதில் புதுச்சேரியிலும் மதுக்கடைகளை திறக்க விரைவில் முடிவு செய்யப்பட்டுள்ளது . மதுக்கடைகளை திறந்தால்தான் மாநில வருவாயை ஈட்ட முடியும், இதற்காக அமைச்சரவையை கூட்டி முடிவை மிக விரைவில் அறிவிப்போம் என்றார்.

மேலும் தமிழகமும் புதுச்சேரியும் அருகாமையில் உள்ள மாநிலங்கள், இடைவெளி இடையில் மாறி மாறி மாநிலங்கள் வரும். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட கோட்டக்குப்பம் மக்கள் புதுச்சேரி மாநில எல்லையான முத்தியால்பேட்டையில் தடுத்து நிறுத்துவது சரியாக இருக்காது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.


ஊரடங்கு தளர்வுக்கு பின் கடைகளில் கடந்த இரண்டு தினங்களாக இருந்த கூட்டம் தற்போது இல்லை. ஆனால் மக்கள் நடமாட்டம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த நேரம் மாற்றம் செய்யப்படுவதற்கான முடிவு எடுக்கப்படவுள்ளது. வியாபாரிகள் பலர் நேரம் மாற்றத்தை வரவேற்று உள்ளனர்.

மக்கள் சிரமத்தை போக்க பலரும் பாதிப்படையாமல் இருக்க தனிமைப்பட்ட பகுதிகள் எவை என்பதை மாநில அரசு அறிவிக்கும் உரிமையை மத்திய அரசு வழங்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளதாக தெரிவித்தார். மேலும் மக்கள் பாதுகாப்புடன் மாநிலத்திற்கு பொருளாதார வளர்ச்சியும் முக்கியம்.

அருகில் உள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டம் சிவப்பு மண்டலமாக உள்ளது. இதனால் நமது மக்களை பாதுகாக்கும் கடமை உள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அனைத்து துறையும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். 80 சதவீத மக்கள் அரசோடு ஒத்துழைக்கின்றார்கள். அதேபோல் மீதமுள்ளவர்களும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.Also see...Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
First published: May 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories