நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் - புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம்

மறைந்த முன்னாள் முதல்வர்கள் பாரூக்,சண்முகம், ஜானகிராமன் ஆகியோருக்கு சிலை வைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். படங்கள்: இளவமுதன்

நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் - புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம்
நாராயணசாமி
  • News18
  • Last Updated: July 22, 2019, 11:56 AM IST
  • Share this:
நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வில் இருந்து புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று நடந்த சட்டமன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்றினார். 

புதுச்சேரியில் 14-வது சட்டப்பேரவை யின் 4-வது கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. அப்போது புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் ஜானகிராமன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 4 அரசு தீர்மானங்கள் அவையில் கொண்டுவரப்பட்டது. முதலாவதாக புதுச்சேரியில் நீர் மேலாண்மைக்கும் நீர்வளப் பாதுகாப்புக்கும் கூடுதல் நிதி வழங்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.


2-வதாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்தினை புதுச்சேரியில் செயல்படுத்த வேண்டாம் என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

3-வதாக புதுச்சேரி மக்களின் விருப்பத்திற்கு எதிராக இந்தி மொழியை திணிக்க வேண்டாம். தமிழ் உட்பட மும்மொழிக் கொள்கையை கடைபிடிக்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
4-வதாக நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வில் இருந்து புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. இந்த 4 அரசு தீர்மானங்களும் ஏகமனதாக இன்று நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டன.

அதன்பின்னர், மறைந்த முன்னாள் முதல்வர்கள் பாரூக்,சண்முகம், ஜானகிராமன் ஆகியோருக்கு சிலை வைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.

மேலும் படிக்க... காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு...!

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories