உங்கள் கருத்து என்ன? | ராகுலை ஸ்டாலின் முன்மொழிந்ததே பாஜகவுக்கு உதவுவதற்காக என்று தினகரன் சொல்வது...

காலத்தின் குரல் | கருத்துக்கணிப்பு....

உங்கள் கருத்து என்ன? | ராகுலை ஸ்டாலின் முன்மொழிந்ததே பாஜகவுக்கு உதவுவதற்காக என்று தினகரன் சொல்வது...
காலத்தின் குரல் | கருத்துக்கணிப்பு....
  • Share this:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து ஐந்து நாள்கள் கடந்த நிலையில் இன்று அமமுகவின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஸ்டாலினுக்கு எதிராகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

குறிப்பாக, மு.க.ஸ்டாலினின் முன்மொழிவு ராகுல் காந்திக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது தொடங்கி பாஜகவுக்கு எதிரான கூட்டணி பலம் பெற்றுவிடக்கூடாது என்ற நயவஞ்சகத் திட்டத்துடன் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார் ஸ்டாலின் என்பது வரை நீள்கிறது தினகரனின் விமர்சனம்.

காங்கிரஸ் கட்சியின் பிரதான கூட்டணிக் கட்சியான திமுகவின் அறிவிப்பு குறித்து அந்தக் கூட்டணியிலேயே இல்லாத தினகரன் ஏன் இவ்வளவு ஆவேசம் காட்டுகிறார்? ஒருவேளை, காங்கிரஸுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற தினகரனின் கனவைக் கலைத்து விட்டார் ஸ்டாலின் என்பதாலா? என்ற கேள்வி முதன்மையாக எழுகிறது.


அதேசமயம், மு.க.ஸ்டாலினின் முன்மொழிவுக்கு மமதா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட மாநிலக் கட்சித் தலைவர்களின் எதிர்வினைகளும் தினகரனின் விமர்சனமும் ஒத்துப்போவதும் கவனிக்கவேண்டிய அம்சமாக இருக்கிறது.

செந்தில் பாலாஜியின் விலகல் மூலம் அமமுகவுக்குள் சர்ச்சைகள் வெடித்திருக்கும் நிலையில், திமுக தலைவர் மீதான தினகரனின் விமரிசனங்களை எப்படி அணுகுவது? அல்லது எப்படிப் புரிந்து கொள்வது?

இது தொடர்பான விவாதம் இன்று இரவு 8 மணிக்கு நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் விவாதம் நடைபெறுகிறது. First published: December 21, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading