திமுக கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பி சலசலப்பை ஏற்படுத்திய பெண்

Youtube Video

 • Share this:
  கோவையில் திமுக சார்பில் நடத்திய கிராமசபை கூட்டத்தில் அதிமுக பெண் நிர்வாகி, திமுக தொப்பி அணிந்தபடி பங்கேற்று கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது கூட்டத்திலிருந்து அப்பெண்ணை வெளியேற்றிய போது திமுகவினர் சிலர் அந்த பெண் மீது தாக்குதல் நடத்தினர்.

  திமுக சார்பில் இன்று கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவராயபுரம் பகுதியில் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தபட்டது. இதில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது இடையில் திமுக சின்னம் பொறித்த தொப்பியுடன் அமர்ந்திருந்த பெண் குறுக்கிட்டு தன்னை பேச அனுமதிக்க வேண்டும் என கேட்டார்.

  நீங்கள் யார் எங்கிருந்து வருகின்றீர்கள் என மு.க.ஸ்டாலின் கேட்டார். தான் ஒரு இந்திய பிரஜை எனக்கும் கேள்வி கேட்க உரிமையுள்ளது எனவும், மைல்கல் பகுதியிலிருந்து வருவதாக தெரிவித்தார். அந்த ஊர் எந்த தொகுதியில் வருகிறது என்பதே தெரியாமால் துணை முதல்வராக இருந்தீங்க? என மு.க.ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்பிய அப்பெண் , ஸ்டாலினுடன் வாக்கு வாத்த்தில் ஈடுபட்டார்.

  அப்போது பேசிய மு.க. ஸ்டாலின் ,நீங்க அமைச்சர் எஸ்.பி வேலுமணி சொல்லி வந்திருக்கீங்க என தெரிவித்தார். உடனடியாக திமுகவினர் கூச்சலிடவே அப்பெண் கூட்டத்திலிருந்து வெளியேற்றபட்டார். அப்போது திமுகவினர் ஒருசிலர் அப்பெண்ணின் மீதும் , அவருடன் வந்த ஆண் மீதும் தாக்குதல் நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்த போலிசார் இருவரையும் மீட்டு போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

  அந்த பெண் சுகுணாபுரம் பகுதியை சேர்ந்த பூங்கொடி(40) என்பதும், அதிமுக-வின் மாவட்ட மகளிர் பாசறை அணியின் துணை தலைவர் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் உடன் வந்தவர் அதிமுகவை சேர்ந்த ராஜன் என்பதும் தெரியவந்த்து.
  இதனையடுத்து அந்த பெண் அதிமுக பிரமுகர்களிடம் செல்போனில் பேசும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.
  Published by:Vijay R
  First published: