மேற்கு வங்கத்தில் ஒரு காலில் வெற்றிபெறுவேன் - மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் ஒரு காலில் வெற்றிபெறுவேன் - மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் தேர்தலை குறுகிய காலத்திற்குள் முடிக்கக்கூடாதா என மம்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Share this:
மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மேற்குவங்க முதல்வரான மம்தா பானர்ஜி இந்த சட்டமன்றத் தேர்தலில் தனது சொந்த தொகுதியில் களம் காணாமல் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார். இதன் காரணமாக நந்திகிராம் தொகுதியின் மீது அனைவரின் கவனமும் இருந்தது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் - பாஜக கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் ஏற்பட்ட சிறு விபத்தில் மம்தாவின் கால்களில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சட்டமன்றத் தேர்தல் பரப்புரையை சக்கரநாற்காலியில் செய்து வருகிறார். இதுகுறித்து எதிர்கட்சிகளும் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

ஹூக்லி மாவட்டம் தீபநாதபூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மம்தா, “நான் ஒரு காலில் மேற்குவங்காளத்தில் வெற்றிபெறுவேன், இரண்டு கால்களில் டெல்லியில் வெற்றிபெறுவேன். பா.ஜ.க-வுக்கு சொந்த கட்சியில் வேட்பாளர்கள் இல்லை. அவர்களின் அனைத்து வேட்பாளர்களும் ஒன்று திரிணாமுல் காங்கிரசில் இருந்து வாங்கப்பட்டவர்கள் அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வாங்கப்பட்டவர்கள்.

அவர்கள் குழாயில் இருந்து தண்ணீரை தெளிப்பதுபோல பணத்தை தெளிக்கின்றனர். வங்காளத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்த காரணம் என்ன?. கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் தேர்தலை குறுகிய காலத்திற்குள் முடிக்கக்கூடாதா’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 
Published by:Ramprasath H
First published: