அதிமுக-வில் இணைந்தது ஏன்? நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய கல்யாண சுந்தரம் விளக்கம்

அதிமுக-வில் இணைந்தது ஏன்? நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய கல்யாண சுந்தரம் விளக்கம்

அதிமுக-வில் இணைந்த கல்யாண சுந்தரம்

சீமான் மீது விஜயலட்சுமி சொல்லும் புகார்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கல்யாண சுந்தரம் கூறினார்.

  • Last Updated :
  • Share this:
    தமிழகத்திற்கு எதிரான எந்த திட்டங்களையும் செயல்படுத்தாது என்ற நம்பிக்கையில் அதிமுகவில் இணைந்திருப்பதாக கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    நாம் தமிழர் கட்சியில் இருந்து அண்மையில் விலகிய கல்யாணசுந்தரம் நேற்று அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.இதையடுத்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒட்டுமொத்த தமிழர்களின் நலனுக்காக செயல்படக்கூடிய ஒரே கட்சி அதிமுக என்பதால் இதில் இணைந்ததாக தெரிவித்தார்.

    திராவிட சித்தாந்தங்களுக்கு எதிரான நிலைப்பாடு தனக்கு இருந்தாலும் அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறினார். அடிமட்ட தொண்டனையும் உயரத்தில் அமர வைப்பது அதிமுக என்றார்.

    சீமான் மீது விஜயலட்சுமி சொல்லும் புகார்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறினார். திமுக ஒருவேளை ஆட்சிக்கு வந்துவிட்டால் நாடு நன்றாக இருக்காது என்றும் குறிப்பிட்டார். சீமானுக்கு நீங்கள் என்ன அறிவுரை சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அறிவுரைகளை ஏற்கும் மனநிலையில் அண்ணன் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

    நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்த பேராசிரியர் கல்யாண சுந்தரம் கடந்த செப்டம்பர் மாதத்தில் கட்சியிலிருந்து விலகினார்.இதேபோல் வழக்கறிஞர் ராஜீவ் காந்தியும் கட்சியிலிருந்து விலகினார். இதனால் கட்சிக்குள் மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டது. அதேவேளையில் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.



    இந்நிலையில் இவர்கள் இருவரும் கட்சிக்கு எதிராக செயல்பட்டு வந்ததாகவும், என் சாவை எதிர்நோக்கி காத்திருந்தவர் தான் கல்யாண சுந்தரம் எனவும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.  மேலும் கட்சியிலிருந்து இருவர் வெளியேறினால் பிளவு ஏற்பட்டு விடாது என்று தெரிவித்திருந்த சீமான் தன்னை இரண்டாக வெட்டினால் மட்டுமே நாம் தமிழர் கட்சியில் பிளவு ஏற்படும் எனவும் கூறியிருந்தார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vijay R
    First published: