சசிகலாவை அதிமுக கட்சியிலிருந்து ஏன் நீக்கவில்லை? கே.பி.முனுசாமி விளக்கம்

சசிகலாவை அதிமுக கட்சியிலிருந்து ஏன் நீக்கவில்லை? கே.பி.முனுசாமி விளக்கம்

முனுசாமி - சசிகலா

ஜெயலலிதாவால் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை விட்டு வெளியேற்றப்பட்ட நபர் இந்த கட்சியை கைபற்றுவோம் என சொன்னால்  கேளிக்கையான செயல்

 • Share this:
  அதிமுக-வில் இல்லாத சசிகலா கட்சி கொடியை பயன்படுத்தி இருப்பது கண்டனத்திற்குரியது என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

  கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, அதிமுகவில் நிரந்தர பொதுசெயலாளர் என்பது ஜெயலலிதா மட்டும் என பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. சட்டதிட்டங்கள் மாற்றப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற அமைப்பை ஓருவாக்கி செயற்க்குழு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது. ஆகையால் பொதுச்செயலாளர் என்பது ஜெயலலிதா மட்டும்தான், மற்றவர்கள் அவர்களது சுயநலத்திற்காக இது போன்ற கருத்துக்களை கூறுக்கின்றனர் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

  டிடிவி தினகரன் பல்வேறு கோணங்களில் இந்த கட்சியை கைபற்ற முயற்சி செய்து பார்த்தார். தர்மமும் நியாயமும் உண்மையானவர்கள் பக்கம் உள்ளது. ஜெயலலிதாவால் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை விட்டு வெளியேற்றப்பட்ட நபர் இந்த கட்சியை கைபற்றுவோம் என சொன்னால்  கேளிக்கையான செயல். அந்த செயல் அவரை காப்பாற்றி கொள்ள அவர்களிடம் உள்ளவர்களை ஏமாற்றி வருகிறார்.

  Also Read : ஜெயலலிதா பயன்படுத்திய காரில் பயணம்... ஆரம்பமே அதிரடி கொடுத்த சசிகலா

  மேலும், சசிகலாவை ஏன் கட்சியில் இருந்து நீக்கவில்லை என்கிற கேள்விக்கு, அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உறுப்பினர்கள் புதுப்பித்தல் நடந்தது அதில் சசிகலா தன்னை புதுப்பித்து உறுப்பினராக இணைத்துக் கொள்ளவில்லை அப்படி கட்சியில் இல்லாத சசிகலாவை எப்படி நீக்க முடியும் என்றார்.

  அதிமுக அமுமுக இணைக்கபடுமா என்கிற கேள்விக்கு அதற்கு டிடிவி தினகரன் என்ற தனிப்பட்ட ஒருவர் அரசியல் செய்வதற்காக துவங்கப்பட்ட கட்சி. அப்படிப்பட்ட ஒரு கட்சியுடன் இணைவதற்கு வாய்ப்பு இல்லை.  வேண்டுமென்றால் டிடிவி அதிமுகவுக்கு எதிராக செய்த தவறுகளை ஓப்புக்கொண்டு மன்னிப்பு கடிதம் கொடுத்து தன்னை அதிமுகவில் இணைக்ககோரினால் அதற்க்கு அதிமுக தலைமை அக்கடிதம் தொடர்பாக பரிசீலனை செய்யும் என்றார்.
  Published by:Vijay R
  First published: