• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியை பெறுவதில் அன்பில் மகேஷ் vs இனிகோ இருதயராஜ் இடையே கடும் போட்டி

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியை பெறுவதில் அன்பில் மகேஷ் vs இனிகோ இருதயராஜ் இடையே கடும் போட்டி

அன்பில் மகேஷ், இனிகோ இருதயராஜ்

அன்பில் மகேஷ், இனிகோ இருதயராஜ்

திமுக தலைவரின் நெருக்கத்தில் உள்ள அன்பில் மகேஷ் மற்றும் இனிகோ இருதய ராஜ் இடையே தொகுதியை பெறுவதில் கடும் போட்டி நிலவுகிறது.

  • Share this:
தமிழக சட்ட மன்ற தேர்தல் தேதி மார்ச் மாதத்தில். தேர்தல் ஆணையம் வெளியிட உள்ள நிலையில், தொகுதிகளில் வேட்பாளர்களாக வாய்ப்பு கேட்டு வேட்பாளர்கள் அரசியல் கட்சி தலைவர்களை மறைமுகமாக சந்தித்து வருகின்றனர்.

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட, உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரான அன்பில் மகேஷ் பொய்யா மொழி முயற்சி செய்து வருகிறார். கடந்த தேர்தலில் திருவெரும்பூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்பில் மகேஷ், வரும் தேர்தலில் தொகுதி மாறி போட்டியிடும் எண்ணத்தில் உள்ளராம். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியின் நட்பு, திமுக தலைவர் ஸ்டாலினிடம் உள்ள நெருக்கத்தின் மூலம் தொகுதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் மகேஷ் களத்தில் இறங்கி பணியாற்ற தொடங்கி விட்டார்.

அதே நேரத்தில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதய ராஜ் , திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட இந்தமுறை வாய்ப்பு கேட்டு திமுக தலைவர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியுடன் நட்பாக இருந்த இனிகோ, அதே போல் திமுக தலைவர் ஸ்டாலின் உடன் அதே நட்பில் தொடர்ந்து நெருக்கமாக உள்ளார்.



ஒவ்வொரு ஆண்டும், திமுக தலைவரை வைத்து பல லட்சங்களை செலவு செய்து கிறிஸ்துமஸ் விழாவை இனிகோ இருதய ராஜ் நடத்துவது வழக்கம், இந்த ஆண்டும் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து மத தலைவர்களை இணைத்தும், ஒண்றினையும் கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக நடத்தி முடித்துள்ளார். அவர் இந்த சட்டமன்ற தேர்தலில் சிறுபான்மை கிறிஸ்துவர்களின் பிரிதிநிதியாக தேர்தலில் போட்டியிட, திமுக தலைவரிடம் வாய்ப்பு கேட்டு வருகிறார். சென்னையில் இருந்து தொழில் செய்தாலும், திருச்சியில்தான் இனிகோ இருதய ராஜ் வளர்ந்துள்ளார். அவருக்கு திருச்சி கிழக்கு தொகுதியில்தான் வீடு உள்ளது. அந்த தொகுதியில் கணிசமான கிறிஸ்துவ வாக்குகளும், அவர் சார்ந்த சமூக வாக்குகளும், இஸ்லாமிய வாக்குகளும் கணிசமாக உள்ளதால், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெற்று விடலாம் ,என்ற புள்ளி விபர கணக்கு போட்டு தொகுதியை கேட்டு காய் நகர்த்தி வருகிறார் இனிகோ.

அதே போல் திமுகவில் முன்னாள் துணை மேயர் அன்பழகன், வழக்கறிஞர் பாஸ்கரன் உள்ளிட்டோரும் தொகுதியைப் பெற முயற்சி செய்து வருவதாக, திமுக வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கபடுகின்றன. அதே நேரத்தில் கடந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டு தோல்வியடைந்ததால், காங்கிரஸ் கட்சியும், மதிமுகவை சேர்ந்த மருத்துவர் ரொக்கையாவிற்கு சீட் பெற வேண்டும் என வைகோவும் முயற்சி செய்து வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலினுடன் அன்பில் மகேஷ்


கடந்த முறை மணப்பாறையில் போட்டியிட்டு தோல்வியடைத்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்த முறை திருச்சி கிழக்கு தொகுதியை பெற வேண்டும் என்ற எண்த்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. யார் தொகுதியை கேட்டாலும் திமுக தலைவரின் நெருக்கத்தில் உள்ள அன்பில் மகேஷ் மற்றும் இனிகோ இருதய ராஜ் இடையே தொகுதியை பெறுவதில் கடும் போட்டி நிலவுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: