அரசியல் வன்முறை பற்றி மோடி, அமித் ஷா பேசலாமா? 2002-ன் ரத்தம் தோய்ந்த கைகள் அவை- திரிணாமுல் எம்.பி. டெரிக் ஓபிரையன் கடும் விமர்சனம்

திரிணாமூல் எம்.பி. டெரிக் ஓபிரையன்.

அவர்களது கூட்டாளிகளான ஷிரோமணி அகாலிதளம், சிவசேனா உள்ளிட்டவர்கள் பாஜகவை விட்டு ஓடிவிட்டார்கள். என்ன செய்வார்கள் பாவம், அதனால்தான் சிபிஐ, அமலாக்கத்துறை, ஐபி ஆகியவற்றோரு பாஜக கூட்டணி வைத்துள்ளது.

 • Share this:
  மேற்கு வங்கத்தில் புதிதாகத் தோன்றியுள்ள காங்கிரஸ்-இடதுசாரி-ஐ.எஸ்.எஃப். கூட்டணி பாஜகவின் கூட்டாளிகள்தான். மே 2ம் தேதி தேர்தல் முடிவு வெளியாகும் போது இந்தக் கூட்டணி ஒற்றை இலக்க இடங்களையே பெறும் என்று திரணாமுல் ராஜ்யசபா எம்.பி. டெரிக் ஓபிரையன் கேள்வி எழுப்பியுள்ளார்.

  ஆங்கில இணையதளம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

  பணத்தை வெட்டுவது பற்றி பாஜக பேசுகிறது. ஆனால் காங், இடது சாரி, ஐ.எஸ்.எஃப். கூட்டணி பாஜகவின் வாக்கை வெட்டு, பணத்தை வெட்டு கூட்டணிதான். பணம் கொடுத்து இவற்றைச் செய்வதில் பாஜக வல்லவர்கள்.

  ஆனால் பெங்கால் மக்களுக்குத் தெரியும் நல்ல நேரத்திலும் கெட்ட நேரத்திலும் அவர்கள் கூட இருந்த கட்சி எது என்று.

  அரசியல் கொலைகள் பற்றி பாஜக பேசுகிறது, திரிணாமுல் அரசியல் கொலைகள் ஈடுபடுவதாக அபாண்டமாகப் பேசுகிறது. ஆனால் இங்கு நடந்த அரசியல் கொலைகள் 3 பாஜகவினால்தான் நடந்தது. பழைய பாஜக, புதிய பாஜக, மற்றும் மாஜி திரிணாமுல் ஆட்கள் அதாவது இப்போது பாஜகவுக்குத் தாவியவர்கள். இவர்கள்தான் அரசியல் கொலைகளுக்குக் காரணம்.

  நாடு முழுதும் 300 பாஜக எம்.பி.க்கள் இருக்கின்றனர். ஏன் குற்ற வழக்குகள் உள்ள 130 எம்பிக்களுக்கு தேர்தல் டிக்கெட் வழங்கியது? அரசியல் வன்முறை பற்றி யார் யார் பேசுவது என்ற விவஸ்தை இல்லையா, மோடி, அமித் ஷா பேசலாமா? 2002 குஜராத் கவலங்கள் பற்றி பேசுவோமா பாஜக? ஒரு பாஜக நபர் பெங்காலில் இறந்தார், ஆனால் அவர் சட்ட விரோத வங்கி நடத்தி வந்தவர். யாராவது இறந்து போகவே காத்திருக்கின்றனர், கோவிட்டில் யாராவது இறந்தால் கூட திரிணாமுல் அரசியல் வன்முறை என்று கூறுவார்கள்.

  8 கட்டங்களாக நடைபெறும் நீளமான தேர்தல் என்பதால் அதற்கு நிறைய பணம் செலவழியும். நிதியளவில் உலகிலேயே பாஜகதான் வலுவானது. தேர்தலை நீட்டிக்கொண்டே போனால் அதிகமாக செலவழிக்க நேரிடும் அவர்கள் செலவழிப்பார்கள்.

  மத்தியில் ஆட்சியில் இருப்பதால் அனைத்து செய்தி ஊடகங்களையும் பேரம் பேசி விடுகின்றனர். அங்கு இரண்டு பேர் உள்ளனர், 2002ம் ஆண்டு ரத்தம் தோய்ந்த கைகள் அவர்களுடையது. எந்த ஒரு நேர்மையும் அந்த இருவரிடத்தில் கிடையாது.

  அபிஷேக் பானர்ஜியின் மனைவியை ஏன் சிபிஐ விசாரணை செய்தது? இது தற்செயல் அல்ல, தேர்தல் நேரம் என்பதுதான் காரணம். இப்படித்தான் மோடி-ஷா கூட்டணி அரசியல் செய்கிறது. அவர்கள் வெளிப்படையாகவே இந்த அரசியலைச் செய்கின்றனர். அவர்களது கூட்டாளிகளான ஷிரோமணி அகாலிதளம், சிவசேனா உள்ளிட்டவர்கள் பாஜகவை விட்டு ஓடிவிட்டார்கள். என்ன செய்வார்கள் பாவம், அதனால்தான் சிபிஐ, அமலாக்கத்துறை, ஐபி ஆகியவற்றோரு பாஜக கூட்டணி வைத்துள்ளது.

  இவ்வாறு சாடினார் டெரிக் ஓபிரையன்.
  Published by:Muthukumar
  First published: