Home /News /politics /

முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ-களுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது? அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்

முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ-களுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது? அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் மொத்தம் 8,59,982 முன்களபணியார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளது. 

முதலமைச்சர், துணைமுதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள்,  50 வயதிற்கு மேற்பட்டோர், பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசுக்கு கருத்து அனுப்பபட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கேள்வி நேரத்தில் பேசிய மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, தமிழகத்தில் ஒரே நேரத்தில் 2000 மினி கிளினிக்குகள் அறிவிக்கப்பட்டு இருப்பினும் கிராமப் புறங்களின் தேவைக்கேற்ப மேலும் அதிகரிக்க வேண்டும் என கோரினார்.

மேலும், கொரோனா தடுப்பூசி முன்களப் பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் அடிக்கடி மக்களை சந்திக்க கூடிய மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எப்போது தடுப்பூசி போடப்படும் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், புதிதாக துவங்கப்பட்டுள்ள 2000 மினி கிளினிக்கான மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அடுத்த வாரத்திற்குள் நியமிக்கப்படுவார்கள். தற்போது வரை 822 மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. இதுவரை 7.34 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 5,55,464 சுகாதார பணியாளர்கள், 1,54,681 காவல் துறையினர், 1,06,697 உள்ளாட்சி துறை ஊழியர்கள், 35,757 வருவாய் துறை ஊழியர்கள் என மொத்தம் 8,59,982 முன்களபணியார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12,34,920 கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளது. 1,33,000 தடுப்பூசிகள் முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், 50 வயதுக்கு மேற்பட்டோர், பத்திரிக்கையாளர்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பாக மத்திய அரசுக்கு கருத்து அனுப்பி இருப்பதாகவும், ஓரிரு வாரங்களில் மத்திய அரசிடம் இருந்து பதில் வரும் எனவும் அதற்கேற்ப முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
Published by:Vijay R
First published:

Tags: Corona vaccine, TN Assembly

அடுத்த செய்தி