இது என்ன மேஜிக் ராகுல்ஜி?- வேளாண் சீர்த்திருத்தங்களுக்காக ராகுல் பேசிய பழைய வீடியோவை வெளியிட்ட நட்டா

இது என்ன மேஜிக் ராகுல்ஜி?- வேளாண் சீர்த்திருத்தங்களுக்காக ராகுல் பேசிய பழைய வீடியோவை வெளியிட்ட நட்டா

ராகுல் காந்தி

நாட்டில் உருளைக்கிழங்கு விளைச்சல் நல்லபடியகா இருக்கும் போது ஏன் இறக்குமதி செய்கிறார்கள் என்பதையும் நட்டா விளக்க வேண்டும் என்று நட்டாவின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் சுர்ஜேவாலா.

  • Share this:
    விவசாயிகள் இடைத்தரகர்களிடமிருந்து விடுபட்டு தங்கள் விளைபொருட்களை தொழிற்துறையினருக்கு நேரடியாக விற்கப் பரிந்துரை செய்து ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசிய பழைய வீடியோ ஒன்றை வெளியிட்டு மத்திய அமைச்சர் நட்டா ‘என்ன மேஜிக் ராகுல்ஜி இது?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    மத்திய அரசு கொண்டு வந்த விவசாயச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ராகுல் காந்தி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மத்தியில் ஆளும் மோடி தலைமை பாஜக ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    இந்நிலையில் பாஜக அமைச்சர் ஜே.பி.நட்டா, ராகுல் காந்தி பேசிய பழைய வீடியோவை வெளியிட்டு, “இது என்ன மேஜிக் ராகுல் ஜி?, நீங்களே பரிந்துரைத்த ஒன்றை தற்போது எதிர்க்கிறீர்கள்?

    நாட்டின் விவசாயிகள் நலன்களில் உங்களுக்கு அக்கறை இல்லை. உங்களால் அரசியல் விளையாட்டு மட்டுமே ஆட முடியும். ஆனால் உங்கள் பொய்வேஷம் கலைந்து விட்டது. நாட்டு மக்களும், விவசாயிகளும் உங்களின் முரண்பட்ட நிலைப்பாடுகளை கண்டு கொண்டு விட்டனர்” என்று நட்டா வீடியோ கிளிப்புடன் இந்தி மொழியில் ட்வீட் செய்துள்ளார்.

    கடந்த ஆண்டு லோக்சபாவில் ராகுல் காந்தி பேசிய போது, உருளைக்கிழங்கு சிப்ஸ் விலை ரூ.10, ஆனால் விவசாயிகளோ கிலோ ரூ.2க்கு விற்கின்றனர். தொழிற்சாலைகள் ரொம்ப தூரம் இருப்பதால் இடைத்தரகர்கள் மூலம் இப்படி விற்க நேரிட்டதாகவும், எனவே விவசாயிகளே நேரடியாக தொழிற்சாலைக்கு விற்றால் இடைத்தரகர்கள் இன்றி விற்கலாம் என்று ராகுல் காந்தி கூறியதான வீடியோவைத்தான் நட்டா வெளியிட்டுள்ளார்.

    ஆனால் நட்டாவின் இந்த விமர்சனத்தை எதிர்க்கும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஞ்சித் சுர்ஜேவாலா, உருளைக்கிழங்குக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை இல்லை என்பதை பாஜக அறியும் என்று நினைக்கிறேன். நாட்டில் உருளைக்கிழங்கு விளைச்சல் இருக்கும் போது ஏன் இறக்குமதி செய்கிறார்கள் என்பதையும் நட்டா விளக்கினால் தேவலை. நாங்களும் விவசாயச் சீர்த்திருத்தங்கள் வேண்டுமென்றுதான் கூறுகிறோம், ஆனால் இந்தக் கருப்புச் சட்டங்களின் மாதிரியில் அல்ல.

    மேலும் எதற்காக 10 லட்சம் டன்கள் உருளையை இறக்குமதி செய்கிறீர்கள்? நாட்டின் விவசாயிகளைத் திண்டாட விட்டு இறக்குமதி ஏன் செய்கிறீர்கள் என்பதையாவது நீங்கள் விளக்க வேண்டும், என்று சுர்ஜேவாலா சாடினார்.
    Published by:Muthukumar
    First published: