பிரதமர் மோடி Vs மமதா பானர்ஜி: மேற்குவங்கத்தில் பாஜக முதல்வர் வேட்பாளர் யார்?

பிரதமர் மோடி Vs மமதா பானர்ஜி

தற்போதைய அளவில் பிரதமர் மோடி Vs மமதா பானர்ஜி என்ற அளவிலே மேற்குவங்க அரசியல் சுழன்று கொண்டிருக்கிறது.

  • Share this:
மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகாத நிலையில். முதல்வர் வேட்பாளருக்கான வாய்ப்பு உள்ளவர்கள் குறித்து தற்போது அறிந்து கொள்வோம்.

தமிழகம், கேரளா, புதுவை, அசாம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய அளவில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக மாறியிருப்பது மேற்குவங்கம் தான். தேசிய கட்சியான பாஜக இதுவரை அதிக வெற்றிகளை அங்கு பெரிய வெற்றியை குவித்ததில்லை. 294 தொகுதிகளை உள்ளடக்கிய மேற்குவங்கத்தில், கடந்த முறை அதாவது 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்தது 3 தொகுதிகளில் மட்டும் தான். ஆனால் அதன் பின்னர் 2019 நாடாளுமன்ற தேர்தலில் 18 எம்.பிக்கள் இம்மாநிலத்தில் இருந்து பாஜகவுக்கு கிடைத்தனர். இதன் பின்னர் அங்கு கள சூழல் முற்றிலும் பாஜகவுக்கு சாதகமாக மாறிவிட்டது. செல்வாக்கு பெற்ற ஆளும் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து வரிசையாய் தலைவர்கள் பாஜகவுக்கு தாவினர்.

இம்முறை பாஜக மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அக்கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது இன்னும் சஸ்பென்ஸாகவே நீடித்து வருகிறது. தற்போதைய அளவில் பிரதமர் மோடி Vs மமதா பானர்ஜி என்ற அளவிலே மேற்குவங்க அரசியல் சுழன்று கொண்டிருக்கிறது.

முதல்வர் வேட்பாளராக யாரின் பெயர்களெல்லாம் அடிபடுகிறது என தற்போது காண்போம்.

சவுரவ் கங்குலி:

பாஜகவில் இணையாத சவுரவ் கங்குலியின் பெயர் தான் இந்தப் பட்டியலின் டாப்-ல் உள்ளது. சமீபத்தில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மீண்டு வரும் சவுரவ் கங்குலி விரைவில் பாஜகவில் இணைந்து களம் காணுவார் என்று கூறப்படுகிறது. வரும் மார்ச் 7ம் தேதி கொல்கத்தாவின் பரேட் மைதானத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் சவுரவ் கங்குலி கலந்து கொள்வார் என்பதே இப்போதைய ஹாட் டாக். ஆனால் இது தொடர்பாக கங்குலி தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் கிடைக்கவில்லை. என்றாலும் மார்ச் 7ம் தேதி சஸ்பென்ஸ் உடையும் என்றே தெரிகிறது.

திலீப் கோஷ்:

மாநிலத்தில் பாஜகவை அடிப்படையில் இருந்து வளர்த்தவர். முன்னாள் ஆர்.ஆர்.எஸ் பிரச்சாரக். திரிணாமுல் காங்கிரஸை எதிர்க்க பாஜகவை பலமாக்கியவர். தற்போதைய மாநில பாஜக தலைவர்.

ததாகதா ராய்:

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சவுகதா ராயின் சகோதரர், 75 வயது மூத்த அரசியல் வாதி. முன்னாள் மேகாலயா ஆளுநர்.

ஸ்வபன் தாஸ் குப்தா:

டெல்லியில் செட்டிலாகி இருக்கும் எழுத்தாளர். ராஜ்யபா உறுப்பினர். மாநிலத்தில் அதிக ஈடுபாடு காட்டும்படி கட்சி மேலிடத்தால் அனுப்பி வைக்கப்பட்டிருப்பவர்.

ஜிஷ்னு பாசு:

ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இருந்து உருவான அறிவியல் விஞ்ஞானி. ஆர்.எஸ்.எஸ் பிரமுகர். என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ கொள்கைகளின் தீவிர ஆதரவாளராக இருந்தார் ..

சுவேந்து அதிகாரி:

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவிய முன்னாள் அமைச்சர். திரிணாமுல் காங்கிரஸில் மிகவும் செல்வாக்கு மிகுந்த ஆளுமை.
Published by:Arun
First published: