Home /News /politics /

West Bengal Election Results: மேற்கு வங்க வாக்கு எண்ணிக்கையில் திருப்பம்: திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலை

West Bengal Election Results: மேற்கு வங்க வாக்கு எண்ணிக்கையில் திருப்பம்: திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலை

மம்தா

மம்தா

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்  வாக்கு எண்ணிக்கையில் கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் ஆணையத்தின் தகவலில்படி ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது

    மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் ஆணையத்தின் தகவலில்படி ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

    தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவாக வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், தமிழகத்தில் திமுக கூட்டணியும், கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணியும், அசாமில் பாஜக கூட்டணியும் முன்னிலை பெற்றுள்ளன.

    மேற்கு வங்கத்தை பொறுத்தவரை திரிணாமூல் காங்கிரஸ் - பாரதிய ஜனதா இடையே கடும் போட்டி நிலவுகிறது. தபால் வாக்குகளின் அடிப்படையில் இருகட்சிகளுமே முன்னிலை வகிப்பதாக முரணபட்ட தகவல்கள் வந்துள்ளன.

    இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. மொத்தமுள்ள  292 தொகுதிகளில் 172 தொகுதிகளுக்கான முன்னணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    இதில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 112 தொகுதிகளிலும்  பாரதிய ஜனதா கட்சி 58 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சுயேட்சைகள் 2 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன. காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் கடும் பின்னடைவை சந்தித்துள்ளன.

    நந்திகிராம் தொகுதியில் முதலமைச்சர்  மம்தா பானர்ஜி,  பாஜக வேட்பாளர் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி ஆகியோர்  மாறி மாறி முன்னிலை பெற்று வருகின்றனர்.  தற்போதைய நிலவரப்படி  சுவேந்து அதிகாரி  15,623 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். மம்தா பானர்ஜி  10,895 வாக்குகள் பெற்று பின் தங்கியுள்ளார்.

     


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Election 2021, Election Result, TMC, West Bengal Assembly Election 2021

    அடுத்த செய்தி