பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ சத்யா மற்றும் அவரது கனவர் பன்னீர்செல்வம் இருவரும் அரசியலில் இருந்து விலகுவதாக வெளியிட்டுள்ள அறிக்கையால் அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் தனக்கு மீண்டும் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவது என தேர்தலை சந்திக்க தயார் நிலையில் இருந்தார். ஆனால் பண்ருட்டி தொகுதிக்கு சொரத்துார் ராஜேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலைியல் நானும் எனது கணவரும் அரசியலில் இருந்து விலகுவதாக சத்யா பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் கடந்த 75 ஆண்டுகளில் பல்வேறு அரசியல் ஜாம்பவான்களாலும் செய்யமுடியாத அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி தந்நதுள்ளதின் மூலம் ஜாதி, மதம், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களின் அன்பினையும், ஆதரவையும், நன்மதிப்பையும் பெற்றுள்ளது நிறைவான மகிழ்ச்சி. எங்களது குடும்ப சூழலை கருத்தில் கொண்டு அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருந்து விடைபெறுகிறேன் என்றுள்ளார்.