அதிமுக-விடம் 12 தொகுதிகள் கேட்டுள்ளோம் - தமிழ் மாநில காங்கிரஸ்

ஜி.கே.வாசன்

சைக்கிள் சின்னம் பெறுவதற்கு 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டியிருப்பதாகவும், அவற்றை தருமாறு கேட்டிருப்பதாகவும் கூறினார்.

 • Share this:
  அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, 12 தொகுதிகளை கேட்டுள்ளது.

  தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணியின் 13 வது செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் வாசன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், சட்டமன்ற தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட விரும்புவதாகவும், அதனை தேர்தல் ஆணையம் வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

  இதனிடையே, த.மா.க. துணைத் தலைவர்கள் கோவை தங்கம், வெங்கடேஷ் ஆகியோர், அமைச்சர் வேலுமணி இல்லத்தில் அவரையும், அமைச்சர் தங்கமணியையும் தொகுதி பங்கீடு தொடர்பாக சந்தித்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை தங்கம், சைக்கிள் சின்னம் பெறுவதற்கு 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டியிருப்பதாகவும், அவற்றை தருமாறு கேட்டிருப்பதாகவும் கூறினார்.

  இதனிடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால் 5ம் கட்டமாக அதிமுக-பாஜக இடையே, இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. நான்கு கட்ட பேச்சுவார்த்தையில், 25 முதல் 30 தொகுதிகள், குறிப்பாக அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என, பாஜக நிர்பந்திப்பதாக கூறப்படுகிறது.
  Published by:Vijay R
  First published: