எந்த ஒரு பதவியிலும் இல்லாமலேயே மோடியையும் அமித் ஷாவையும் எதிர்த்தவர் சசிகலா: கருணாஸ் பேட்டி

கருணாஸ்

மம்தா பானர்ஜி, ஜெயலலிதா இவர்களெல்லாம் ஆட்சியதிகாரத்தில் இருந்து கொண்டுதான் எதிர்த்தார்கள், ஆனால் எந்தப் பதவியிலுமே இல்லாத ஒருவர் இப்பேர்ப்பட்ட காரியங்களையும் செய்ய முடியும் என்று உலகத்துக்கு நிரூபணம் பண்ணவங்க சசிகலா, ஈசியா எடைபோடக்கூடாது, வெய்ட் அண்ட் ஸீ.

  • Share this:
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் நடிகருமான கருணாஸ் முதலமைச்சர் பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல, சசிகலாவால் நியமிக்கப்பட்டவர் என்று தெரிவித்துள்ளார்.

    ஜெயலலிதா மம்தா பானர்ஜி கூட ஆட்சியதிகாரத்தில் இருந்து கொண்டுதான் பிரதமர் மோடியை எதிர்த்தார்கள், ஆனால் சசிகலா எந்த ஒரு பதவியும் இல்லாமலேயே எதிர்த்தார்.

    அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கருணாஸ் கூறியதாவது:

    அதாவது, கூவாத்தூர்ல கருணாஸ் மட்டுமா இருந்தாரு? அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்களும்தான் இருந்தார்கள். அங்கு 110-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாங்க, இதுமாதிரி நிறைய பேர் இருந்தாங்க. அந்த இடத்துல என்னை மாதிரி கிட்டத்தட்ட 150 பேர் இருந்தாங்க. ஆகவே நீங்க கேக்கற கேள்வி அவங்க எல்லாருக்குமே பொருந்தும்.

    சிஎம் யாரால தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான. மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததுதானே. சின்னம்மா வந்து விடக்கூடாது என்பதில் நரேந்திர மோடியும் அமித் ஷாவும் சார்ந்த அந்த பிஜேபிதான் என்பது எல்லாருக்கும் வெளிப்படையா தெரியும்.

    அந்த மத்திய அரசு கொண்டு வர நினைத்தது வேறு ஒருவரை என்பதும் எல்லாருக்கும் தெரியும், அதை உடைத்து வேறு ஒருவரை முதல்வராகச் செய்தவர் சசிகலா. இதை யாரும் என்றைக்கும் மறுக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது.

    மம்தா பானர்ஜி, ஜெயலலிதா இவர்களெல்லாம் ஆட்சியதிகாரத்தில் இருந்து கொண்டுதான் எதிர்த்தார்கள், ஆனால் எந்தப் பதவியிலுமே இல்லாத ஒருவர் இப்பேர்ப்பட்ட காரியங்களையும் செய்ய முடியும் என்று உலகத்துக்கு நிரூபணம் பண்ணவங்க சசிகலா, ஈசியா எடைபோடக்கூடாது, வெய்ட் அண்ட் ஸீ.
    Published by:Muthukumar
    First published: