சட்ட மன்ற தேர்தல் கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை விஜயகாந்த் நாளை வெளியிடுவார் என பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக பொறுப்பாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். அப்போது ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய பிரேமலதா, அதிமுக கூட்டணியில் உரிய மதிப்பு தராவிட்டால் தனித்து போட்டியிட தயாராக உள்ளதாக தெரிவித்தார். மேலும் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வல்லமை தேமுதிகவிடம் உள்ளது. 2021ம் ஆண்டும் தேர்தலில் போட்டியிட 234 வேட்பாளர்கள் வரை தயராக உள்ளனர் . கட்சி என்ன அறிவித்தாலும் அதனை அனுசரித்து பணியாற்ற வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூட்டத்தில் பேசியுள்ளார்.
மேலும் எந்த தொகுதியிலும் பாமக நிர்வாகிகள் ஒத்துழைப்பு தரவில்லை என தேர்தல் பொறுப்பாளர்கள் பிரேமலதாவிடம் புகார் தெரிவித்ததுள்ளனர். நாளை விஜயகாந்த் - பிரேமலதா விஜயகாந்த் தம்பதியரின் 31 வது திருமண நாள் என்பது குறிப்பிடதக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.