எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தொண்டர்கள் என்னை வெற்றி பெற வைப்பார்கள் - விஜயபிரபாகரன் விருப்பமனு தாக்கல்

எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தொண்டர்கள் என்னை வெற்றி பெற வைப்பார்கள் - விஜயபிரபாகரன் விருப்பமனு தாக்கல்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜய பிரபாகரன் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.

 • Share this:
  தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்காக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

  அதிமுகவுடனான தொகுதி பங்கீடு இன்னும் முடிவுக்கு வராத நிலையில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் தொகுதியை குறிப்பிடாமல் இன்று காலை விருப்பமனு தாக்கல் செய்திருந்தார். அவரை தொடர்ந்து அவருடைய மகன் விஜய பிரபாகரனும் தொகுதியை குறிப்பிடாமல் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜய பிரபாகரன் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.  தேமுதிக அலுவலகத்தில் விருப்பமனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபிரபாகரன், நான் எந்தத் தொகுதியில் நின்றாலும் தேமுதிக தொண்டர்கள் என்னை வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். மேலும் அதிமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. தேமுதிக பேச்சுவார்த்தை குழு பதில் அளிப்பார்கள் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
  Published by:Vijay R
  First published: