40ஆண்டு காலம் மக்களுக்காக ஓடி ஓடி உழைத்த எங்கள் அப்பாவை மக்கள் எல்லாம் சேர்ந்து ஒழித்துவிட்டீர்கள். எனக்காவது ஓரு வாய்ப்பு கொடுங்கள் என விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் ஆரணியில் பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க வேட்பாளராக மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் பாஸ்கரன் என்பவர் போட்டியிடுகின்றார். ஆரணி அண்ணாசிலை அருகே தே.மு.தி.க வேட்பாளர் பாஸ்கரனை ஆதரித்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மூத்த மகன் விஜயபிரபாகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய விஜயபிரபாகரன், ‘40ஆண்டு காலம் மக்களுக்காக ஓடி ஓடி உழைத்த எங்கள் அப்பாவை மக்கள் எல்லாம் சேர்ந்து ஒழித்துவிட்டீர்கள். எனக்காவது ஓரு வாய்ப்பு கொடுங்கள் தே.மு.தி.க வேட்பாளர் பாஸ்கரனை வெற்றி பெற வைத்தால் 3 மாதம் இந்த ஆரணி தொகுதியில் தங்கி தொகுதிக்காக நான் பாடுபடுவேன். தே.மு.தி.க வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனால் விஜயகாந்த் விருத்தாசலத்தில் தன்னுடை சொந்த பணத்தில் நலதிட்டங்கள் செய்தது போல் என்னுடைய சொந்த பணத்தில் ஆரணி மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்வேன்.
தே.மு.தி.க வேட்பாளர் வெற்றி பெற்றால் எம்.எல்.ஏ-வுக்கு வழங்கப்படும் சம்பள தொகை கூட தொகுதி மக்களுக்கே செலவு செய்யப்படும். ஆரணி அ.தி.மு.க வேட்பாளர் சேவூர் ராமசந்திரன் வெற்றி பெறுவதற்காக அழுததாக சொன்னார்கள் உங்களால் மக்கள் 5ஆண்டுகள் அழுதார்களே. மக்களிடம் ஏன் நாடகமாடுகின்றனர் என்று கேள்வி எழுப்பினார்..
ஆரணி செய்தியாளர்: மோகன்ராஜ்
Published by:Ramprasath H
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.