நான் நெருப்பு... பாஜக என்னை நெருங்க முடியாது - காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி

கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து வதந்தி பரப்புவர்களை சும்மா விடப்போவதில்லை என்று விஜயதாரணி கடுமையாக தெரிவித்தார்.

  • Share this:
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பாஜகவில் இணைவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தான் நெருப்பு போன்றவர் என்றும் தன் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பும் சில பத்திரிக்கைகள் மீது வழக்கு தொடரவுள்ளதாகவும் கூறினார்.

காங்கிரஸ் பரம்பரையில் பிறந்த தனக்கு பாஜகவுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் மட்டுமல்ல எல்லா கட்சிகளிலும் ஆணாதிக்க சிந்தனை உள்ளதாக தெரிவித்த விஜயதாரணி, குஷ்பு சேர்ந்துள்ள பாஜகவில் தான் ஆணாதிக்கம் அதிகம் என்றார். மேலும்,  குஷ்பு  சென்றதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த நஷ்டமும் இல்லை, அங்கு சென்றதால் எந்த அரசியல்  மாற்றமும் நிகழப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.


கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் கட்சித் தலைமை வாய்ப்பு தந்தால் போட்டியிடுவதாக தெரிவித்துள்ள விஜயதாரணி, கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து வதந்தி பரப்புவர்களை சும்மா விடப்போவதில்லை என்று விஜயதாரணி கடுமையாக தெரிவித்தார்.ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்


First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading