எய்ம்ஸ் செங்கலை எடுத்துக் காட்டும் உதயநிதி கச்சதீவில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வர முடியுமா? விஜயபிரபாகரன் கேள்வி

எய்ம்ஸ் செங்கலை எடுத்துக் காட்டும் உதயநிதி கச்சதீவில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வர முடியுமா? விஜயபிரபாகரன் கேள்வி

விஜயபிரபாகரன்

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணகோபாலை ஆதரித்து விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 • Share this:
  துவரங்குறிச்சி மற்றும் வையம்பட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலை எடுத்து அதிமுகவிடம் அருமையான கேள்வியை உதயநிதி ஸ்டாலின் கேட்கிறார். நல்ல கேள்வி தான். ஆனால் உதயநிதி கச்சத்தீவில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்து வரமுடியுமா? அவர்கள் மீது குறையை வைத்துக் கொண்டு அடுத்தவர்களை பற்றி கேள்வி கேட்கிறார்கள்.

  இதே போது தற்போது உருவாகி உள்ள அமமுக – தேமுதிக கூட்டணி என்பது துரோகத்தால் உருவான கூட்டணி. கடந்த 2011 ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். ஆனால் இப்போது அமமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். ஏனென்றால் அமமுகவில் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் இருக்கிறார்.

  இஸ்லாமியர்களுக்கும் எங்களுக்கும் எப்போதும் ஒரு ஒற்றுமை உண்டு. சிறுபான்மை மக்களுக்கு விஜயகாந்த் எப்போதும் நல்லதே செய்து கொண்டிருப்பார். அதனால் தான் என்னுடைய தம்பி பெயர் முதலில் சௌகத் அலி என வைக்கப்பட்டது. ஆனால் பாஸ்போட் உள்ளிட்ட தேவைகளுக்கான சண்முகபாண்டியன் என வைத்துள்ளோம். இப்போதும் நான் வீட்டில் இருந்தால் சௌகத் என்று தான் அழைப்பேன் என்று கூறினார்.
  Published by:Vijay R
  First published: