ஊழலை ஸ்டாலின் நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத்தயார்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சவால்

ஊழலை ஸ்டாலின் நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத்தயார்: அமைச்சர்  எஸ்.பி. வேலுமணி சவால்
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • Share this:
சென்னை மாநகராட்சிப் பணிகளில் கட்டுமானத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதை திமுக தலைவர் ஸ்டாலின் நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத்தயார் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சியின் பல்வேறு பணிகளில் ஆற்று மணல் பயன்படுத்துவதாக மதிப்பீடு தந்துவிட்டு எம்-சாண்ட் பயன்படுத்தியதாகவும் அதில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் வேலுமணி, ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டத்தின்படியே ஒப்புந்தப்புள்ளிகள் கோரப்பட்டதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்த பணிகளில் வெறும் 32 கோடி ரூபாய் அளவிலான கான்கிரீட் பணிகளுக்கு மட்டுமே எம்-சாண்ட் அல்லது ஆற்று மணல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

32 கோடி ரூபாய் திட்டத்தில் ஆயிரம் கோடி ஊழல் என ஸ்டாலின் கூறியிருப்பது பொய் என்றும் ஆதாரத்துடன் நிரூபித்தால் அமைச்சர் பதவியையும், கட்சி பதவிகளையும் ராஜினாமா செய்வேன் என்றும், கூறியுள்ளார். ஆதாரத்துடன் நிரூபிக்கத் தவறினால், திமுக தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலை விட்டே ஒதுங்கவேண்டும் என்றும் சவால் விடுத்துள்ளார்.


 
First published: December 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading