வேளச்சேரி தொகுதி : வாக்குச்சாவடி எண் 92-ல் ஏப்ரல் 17 மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

வேளச்சேரி தொகுதி : வாக்குச்சாவடி எண் 92-ல் ஏப்ரல் 17 மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

வாக்குப்பதிவு இயந்திரம்

வேளச்சேரி தொகுதியில் வாக்குச்சாவடி எண் 92-ல் ஏப்ரல் 17-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி 234 தொகுதிக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. மாநிலம் முழுவதும் அமைதியாக நடந்து முடிந்த தேர்தலில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குப்பதிவானது. வாக்குப்பதிவு முடிந்து உடன் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  வேளச்சேரி தொகுதியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் எந்தவிதமான பாதுகாப்புமின்றி இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே வேளச்சேரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் சம்பவ இடத்திற்கு வந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

  இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மாநகராட்சி ஊழியர்கள் என்றும் இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்ட்ட இயந்திரம் பழுதான விவிபேட் இயந்திரங்கள், இவை பயன்படுத்தப்படவில்லை என்றனர்.

  இதனிடையே இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. தேர்தல் அதிகாரி பிரகாஷ் சம்மந்தப்பட்ட மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பினார். மேலும் இந்த விவகாரத்தில் விதிமீறல் இருந்தால் தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியிருந்தார்.

  இந்நிலையிலி தற்போது வேளச்சேரி தொகுதயில் வாக்குச்சாவடி எண் 92-ல் ஏப்ரல் 17-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Vijay R
  First published: