• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • ’எதிரணிக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டால்...’ தனிச்சின்னம் விவகாரம் தொடர்பாக தொல்.திருமாவளவன் விளக்கம்

’எதிரணிக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டால்...’ தனிச்சின்னம் விவகாரம் தொடர்பாக தொல்.திருமாவளவன் விளக்கம்

விசிக தலைவர் - திருமாவளவன்

விசிக தலைவர் - திருமாவளவன்

திமுகவிற்கும் கூட்டணி கட்சிகளுக்கும் எந்த நெருடலும் இல்லை கூட்டணி. வலுவாக இருக்கிறது என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
விடுதலை சிறுத்தை கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் புதுச்சேரி சுதேசி மில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் உத்தரபிரதேசத்தில் தலித் இளம்பெண் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் உத்தரபிரதேச அரசை கலைக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி., ரவிக்குமார் எம்.பி., சிந்தனை செல்வன் உட்பட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பஞ்சமி நிலத்தை மீட்க போராடி உயிர் இழந்தவர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன் கூட்டணிகள் மற்றும் தனிச்சின்னம் ஆகியவை குறித்து பேட்டியளிக்கையில் கூறியதாவது, “திமுகவிற்கும் கூட்டணி கட்சிகளுக்கும் எந்த நெருடலும் இல்லை கூட்டணி. வலுவாக இருக்கிறது. இதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், தவறான தகவல்களை பரப்பி வேண்டுமென்றே பரபரப்பை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்.

திமுக கூட கூட்டணி கட்சிகள் மீது எந்த கருத்தையும் திணிப்பதில்லை. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற கருத்தை அவர்கள் எந்த காரணத்துக்காக தெரிவிக்கின்றார் என்றால், எந்த காரணத்திற்காக நாம் தொகுதியை விட்டுவிடக் கூடாது, சின்னம் தான் தோல்வி காரணமென நிலை வந்தால் அதை எதிர்த்துப் போட்டியிடும் கட்சிகளுக்கு அது வாய்ப்பாக அமைந்துவிடும்.. அப்படி ஒரு வாய்ப்பை தந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் கூடுதல் பலமாக இருக்கும் என்று தான் சொல்கிறார்கள்..

கூட்டணி கட்சிகளானது தன் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் அல்லது குறைத்து விடும் வகையில் முடிவை எடுப்பதாக நாங்கள் கருதவில்லை. ஆனாலும் கூட நாங்கள் தனிச் சின்னத்தில் போட்டியிடவோம் என்று சொன்னபோது எங்கள் உணர்வை மதித்து அதற்கு கடந்த காலங்களில் அனுமதித்தது திமுக. அப்படித்தான் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் எங்களுக்கிடையே ஒரு நல்ல இணக்கமான உறவு நீடிக்கும். நல்ல முடிவு நாங்கள் எடுப்போம் என்றார்.

கடலூர் மாவட்டத்தில் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் அவமதிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் ஏராளமான ஊராட்சி மன்றங்களில் இப்படிப்பட்ட கொடுமைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 2200-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் பட்டியலினத்தவர்களை தலைவர்களாக கொண்டுள்ளன. அங்கு அனைவரும் சுதந்திரமாக செயல்படுகிறார்களா? என்பது கேள்விக்குறிதான். கடலூர் மாவட்டத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இதே நிலைதான் இருப்பதாக கருதுகிறேன்.

ஐபிஎல் புள்ளிப்பட்டியல்

போட்டி அட்டவணை

எனவே தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் தலித் ஊராட்சி மன்றங்களில் என்ன நெருக்கடிகள் உள்ளன என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.. இதற்காக ஒரு ஆணையம் அமைக்க வேண்டும்.. புலனாய்வு செய்து தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுதந்திரமாக செயல்படுகிறதா..? அவர்கள் இருக்கையில் அமர்ந்து செயல்படுகிறார்களா..? அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தினார்களா..? அவர்களுக்கு ஏதாவது சாதிய நெருக்கடியில் உள்ளதா..? என்பதை கண்டறிய வேண்டும்.. அவ்வப்போது வெளிப்படும் பிரச்சனைக்கு மட்டும்  நடவடிக்கை  என  இல்லாமல் தமிழ்நாடு முழுதும் இதை கண்டறிய கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு  கோரிக்கை வைக்கிறேன் என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: