வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு : கருணாநிதி மீது ராமதாஸ் சரமாரி புகார்

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு : கருணாநிதி மீது ராமதாஸ் சரமாரி புகார்

ராமதாஸ்

20 சதவீத இட ஒதுக்கீடு முழுக்க முழுக்க வன்னியர்களின் சொத்து என்றும் அதை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிய போது நல்ல கனி என்று கூறி அழுகிய கனியை கொடுத்து கருணாநிதி ஏமாற்றியதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

  வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 21 உயிர்களைக் கொடுத்து போராடிய வன்னியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 20 சதவீத இட ஒதுக்கீட்டை, கருணாநிதி சூழ்ச்சி செய்து கூடுதலாக 107 சாதிகளுக்கு அள்ளிக்கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

  20 சதவீத இட ஒதுக்கீட்டை அனுபவிக்கும் எந்த சாதியும் அதற்காக போராடவும் இல்லை, ஆதரவு குரலும் கொடுக்கவில்லை எனக் கூறியுள்ளார். 20 சதவீத இட ஒதுக்கீடு முழுக்க முழுக்க வன்னியர்களின் சொத்து என்றும் அதை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சொத்தை மீட்பதற்காகவே அறவழி தொடர் போராட்டங்களை நடத்துவதாகவும், இனியும் தங்களை யாரும் ஏமாற்ற முடியாது எனவும் ராமதாஸ் கூறியுள்ளார். அதோடு 20 சதவீத இட ஒதுக்கீட்டை அடையும் வரை ஓயமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: