`திருத்துங்கள்; இல்லையேல் திருத்துவோம்!' - திருவள்ளுவர் புகைப்பட விவகாரத்தில் வைரமுத்து கண்டனம்

சி.பி.எஸ்.இ புத்தகத்தில் திருவள்ளுவர்

மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து கவிப்பேரரசு வைரமுத்துவும் இதுதொடர்பாக தனது விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.

 • Share this:
  திருவள்ளுவர் தொடர்பான சர்ச்சைகள் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அவ்வகையில் தற்போது, சி.பி.எஸ்.இ 8-ம் வகுப்பு மாணவர்களின் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள திருவள்ளுவர் புகைப்படத்தில் முடியற்று வலுக்கை தலையுடன் காவி உடையணிந்து கோயில் பூசாரி போன்ற தோற்றத்தில் உள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால், எதிர்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

  இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "சி.பி.எஸ்.இ 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகம் ஒன்றில் அய்யன் திருவள்ளுவருக்கு ஆரிய அரிதாரம். பா.ஜ.க அரசு அனுமதிக்கிறது; அடிமை அ.தி.மு.க அரசு வேடிக்கை பார்க்கிறது. ஆரிய வித்தைகளை எம் தமிழர் பண்பாட்டில் காட்ட எத்தனித்தால் தமிழகம் ஏற்காது; மானமுள்ள தி.மு.க. பொறுக்காது. எச்சரிக்கை’ என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

  மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து பாடலாசிரியர் வைரமுத்துவும் இதுதொடர்பாக தனது விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் வைர முத்து, ’உலகப் பொதுமறை திருக்குறள்; உலகப் பொதுமனிதர் திருவள்ளுவர். அவருக்கு வர்ண அடையாளம் பூசுவது தமிழ் இனத்தின் முகத்தில் தார் அடிப்பது போன்றது. ஏற்றுக்கொள்ள முடியாது. திருத்துங்கள்; இல்லையேல் திருத்துவோம்.” என்று #Thiruvalluvar #திருவள்ளுவர் #தமிழ் ஆகிய ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி பதிவிட்டுள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ram Sankar
  First published: