எங்களுக்கு எண்ணிக்கை முக்கியமல்ல, தமிழ்நாட்டின் நலனே முக்கியம் - வைகோ மகன் துரை வையாபுரி

துரை வையாபுரி

மதிமுக வேட்பாளர் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பைப் பெற்றவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்

 • Share this:
  விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக கூட்டணி வேட்பாளர் மதிமுக ஏ.ஆர்.ஆர்.ரஹ்மானை ஆதரித்து வைகோவின் மகன் துரை வையாபுரி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

  இதன்பின் செய்தியளார்களை சந்தித்த துரை வையாபுரி,  தேர்தல் அறிக்கையில் பொருத்தவரை திமுக கடந்த முறை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது. இந்த முறை திமுக கொடுத்திருக்கும் அறிக்கைகள் நிறைவேற்றக் கூடியது. அதிமுக தேர்தல் அறிக்கையில் சிலவற்றை நிறைவேற்ற முடியாது.

  தமிழ்நாட்டைப் பொருத்தவரை எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மத்திய அரசு வழங்கக்கூடிய திட்டங்களையும் நிதியையும் வழங்க வேண்டும். இது தவறும் பட்சத்தில் இது மத்திய அரசுக்கு கெட்ட பெயரை உண்டாக்கும்.

  மதிமுக வேட்பாளர் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பைப் பெற்றவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். எங்கள் கூட்டணி சாதி மதத்திற்கு அப்பாற்பட்டது. தனி சின்னம் வாங்கி தேர்தலில் நிற்பது நாட்கள் மிகக் குறைவாக உள்ளதால் தான் கூட்டணி சின்னத்தில் போட்டியிடுகிறோம். எங்களுக்கு எண்ணிக்கை முக்கியமல்ல தமிழ்நாட்டின் நலனே முக்கியம். எங்களுக்கு அணி தான் முக்கியம் எண்ணிக்கை முக்கியமில்லை என்றார்.
  Published by:Vijay R
  First published: