மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை திடீர் ரத்து

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை திடீர் ரத்து

அமித்ஷா

அமித்ஷாவின் வருகையின் போது தமிழக கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 • Share this:
  உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14-ம் தமிழகம் வருவதாக இருந்த நிலையில் தற்போது அமித்ஷா வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா துக்ளக் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த நவம்பர் மாதம் சென்னை வந்திருந்தார். அப்போது கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் அமித்ஷா பங்கேற்ற போது அதிமுக, பாஜக கூட்டணி உறுதியானது. மேடையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் பாஜக உடன் கூட்டணி தொடருவதாக தெரிவித்தனர்.

  இதனிடையே தமிழகத்தில் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான், ஆனால் பாஜக முதல்வர் வேட்பாளர் யார் என்று கட்சி தலைமை தான் முடிவெடுக்கும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் உடனே கூட்டணி என்று அதிமுக அமைச்சர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர். இதனால் அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது

  ஜனவரி 14-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அமித்ஷாவின் வருகையின் போது தமிழக கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு பதிலாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வருகை தர உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: