கருணாநிதி போட்டியிட்ட சென்னை சேப்பாக்கம் தொகுதி இப்போது மீண்டும் நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க சார்பில் உதயநிதி ஸ்டாலின் களமிறங்குகிறார். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் நேற்று அவரது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மனுத்தாக்கல் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
கேள்வி:வாரிசு அரசியல் அடிப்படையில் உதயநிதி நிறுத்தப்பட்டு இருப்பதாக உங்கள் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது?
இது ஒன்றும் நியமன பதவி கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் சட்டமன்ற உறுப்பினர் ஆக முடியும். இத்தொகுதி மக்கள் அதை முடிவு செய்வார்கள். தொகுதி மக்கள் என்னை வாரிசாக பார்த்தால் நிராகரித்து விடுவார்கள். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் கட்டாயம் நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தொகுதி மக்கள் என்னை நன்றாக வரவேற்கிறார்கள்.
கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்களை சொல்லி வாக்கு சேகரித்து வருகிறோம். இந்த நேரத்தில் என் தாத்தா கருணாநிதி இருந்திருந்தால் நிச்சயம் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று கூறினார்.