அன்புடன் வாழ்த்தினார்: தேமுதிக தலைவர் விஜயகாந்துடனான சந்திப்பு குறித்து உதயநிதி நெகிழ்ச்சி

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின்,  தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார்.

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின்,  தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார்.

 • Last Updated :
 • Share this:
  சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

  தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கவுள்ளது. அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7ம் தேதி முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

  திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக பல்வேறு பகுதிகளிலும்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார். அவரது ‘எய்ம்ஸ்’ செங்கல் பிரச்சாரம் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது.

  சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கசாலியை விட 69,355 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் வெற்றியை தொடர்ந்து பல்வேறு தலைவர்களையும் நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்று வருகிறார்.

  அந்த வகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சாலிகிராமத்தில்  உள்ள அவரது இல்லத்தில் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றார். விஜயகாந்தின் உடல் நிலை குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

  இது குறித்து தனது முகநூல் பக்கத்தில், தேமுதிக தலைவர், திரையுலகின் மூத்தவர் அண்ணன் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாகவும் கழகத்தின் வெற்றிக்காகவும் தனது வெற்றிக்காகவும் விஜயகாந்த் அன்போடு வாழ்த்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


  இந்த சந்திப்பின் போது விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், அவர்களது மகன் விஜய பிரபாகரன், எல்.கே.சுதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: