• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • EXCLUSIVE :‘பர்த் சர்ட்டிபிகேட் பார்க்காதீர்கள்.. ரிப்போர்ட் கார்டை பாருங்கள் !’- வாரிசு அரசியல் கேள்விக்கு உதய் பதில்

EXCLUSIVE :‘பர்த் சர்ட்டிபிகேட் பார்க்காதீர்கள்.. ரிப்போர்ட் கார்டை பாருங்கள் !’- வாரிசு அரசியல் கேள்விக்கு உதய் பதில்

ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின்

ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின்

50 வருடமா கட்சிக்காக உழைத்த எங்கள் தலைவரின் மீதே இந்த குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்

  • Share this:
    தி.மு.க இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலினுடன் நியூஸ்18 தமிழ் நடத்திய பிரத்யேக நேர்காணல்.

    கேள்வி: உங்களை மையப்படுத்தி வரும் விமர்சனங்களை எப்படி பார்க்கிறீர்கள்.

    பதில்: இப்ப 3 வருஷமா இல்ல. முன்னாடி இருந்தே இந்த குற்றச்சாட்டு சொல்லி வருகிறார்கள். 50 வருடமா கட்சிக்காக உழைத்த எங்கள் தலைவரின் மீதே இந்த குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். எனக்கு பொறுப்பு கொடுக்கும்போது தலைவரிடம் நான் சொன்னதுதான். என் மீது இந்த குற்றச்சாட்டை வைப்பார்கள். விமர்சனம் செய்வார்கள். இந்த விமர்சனத்துக்கு நான் எந்த பதிலும் கூற முடியாது. என்னிடம் இருக்கும் ஒரே ஒரு பதில் என்னிடம் இருக்கும் உழைப்பு தான். நான் என்ன செய்கிறேன் கட்சிக்காக எவ்வளவு உழைக்கிறேன் என்பதை வைத்து அதை எதாவது ஒரு வகையில் நியாயப்படுத்த முடியும். தலைவர் ஏற்கெனவே சொன்னது போலத்தான் பர்த் சர்ட்டிபிகேட் பார்க்காதீர்கள். ரிப்போர்ட் கார்டை பாருங்கள் என்றது போலத்தான். என் மீது இருக்கும் குற்றச்சாட்டு உண்மை என மக்கள் நம்பினால் சேப்பாக்கம் திருவல்லிக்கேனி மக்கள் என்னை தோற்கடிப்பார்கள்.



    கேள்வி: உதயநிதிக்கு வாய்ப்பு கிடைக்கிறது அதனால் மக்கள் ஏற்கிறார்களா இல்லை நிராகரிக்கிறார்கள் என அடுத்த கட்டத்துக்கு போக முடியும். வாரிசு என்பதால் மற்றவர்களுக்கு வாய்ப்பே கிடைக்காமல் போகிறது.

    பதில்: 185 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தனையும் அவர்களின் வாரிசுகளுக்காக கொடுத்திருக்கிறார்கள். 185 வேட்பாளர்களில் 20 என்பது மிகவும் குறைவான எண்ணிக்கை தானே. எந்த இடத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்பதை பார்த்து தான் தலைவர் சீட் ஒதுக்கிறார். ஒருவருடைய வாரிசு என்பதற்காக யாருக்கும் சீட் ஒதுக்கியது இல்லை. மக்கள் முடிவெடுக்கட்டுமே.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: