அதிமுகவை இனி அமித்ஷா திமுக என அழைக்கவேண்டும் - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தின் சுயமரியாதையை அடகு வைத்த அதிமுகவை இனி அடிமை திமுக, அமித்ஷா திமுக என அழைக்கவேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

  • Share this:
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடுகள் என பரபரப்பாக இயங்கி வருகின்றன. அதேநேரம், பிரசாரங்களின் போது ஆளும்கட்சியை கடுமையாக விமர்சித்தும் பேசு வருகின்றன. அவ்வகையில், தற்போது தமிழகத்தின் சுயமரியாதையை அடகு வைத்த அதிமுகவை இனி அடிமை திமுக, அமித்ஷா திமுக என அழைக்கவேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை புத்தக்கண்காட்சியில் தமிழ்மண் பதிப்பகம் சார்பில் தமிழ்முனை இணையதள மின்னூல் தொடக்க விழா மற்றும் அண்ணா அறிவுக்கொடை 64 தொகுதி புத்தகம் அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று அண்ணா அறிவுக்கொடை நூலை அறிமுகம் செய்தார்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், ``புத்தகத்தை அறிமுக செய்ய வந்திருக்கும் நானே உங்களுக்கு எல்லாம் ஒரு அறிமுகம் தான். தமிழகத்தில் முதல் முறையாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது நான் தான் அதற்காக திருக்குவளையில் கலைஞர் வீடு முன் என்னை கைது செய்தார்கள். ஊழல் செய்துவிட்டு நான் சிறைக்கு செல்லவில்லை, உதய சூரியனுக்கு வாக்கு கேட்டதற்காக நான் சிறைக்கு சென்றேன். இதே ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மே 2-ம் தேதி திமுக வின் வெற்றி விழா நடைபெறும். நான் மிகப்பெரிய வாசிப்பாளர் கிடையாது. மிகவும் குறைவாகத்தான் படிப்பேன். கொரோனோ காலத்தில் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்திக்கொண்டேன்.” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ``சுயமரியாதையை அதிமுக அடகுவைத்துவிட்டது. எனவே அதை அடிமை திமுக, அமித்ஷா திமுக என்றுதான் அழைக்க வேண்டும். கலைஞர் இருக்கும் வரை மத்தியிலிருந்ரு யார் வந்தாலும் கோபாலபுரம் வந்து அவரை சந்தித்துவிட்டு செல்வார்கள். ஆனால் இன்று அங்கு கிளம்பியதும் இந்த இரண்டு அடிமைகளும் விமான நிலையத்திற்கு சென்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். மோடி இன்று தமிழ் கற்றுக்கொள்ள முடியாதது வருத்தம் அளிக்கிறது என்று கூறுகிறார். புதிய கல்விக்கொள்கை திட்டத்தை புகுத்திவிட்டு இதுபோல் நாடகமாடுகிறார். கடந்த முறை தமிழகம் வந்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு எடுத்துவைத்த செங்கல் இன்றும் அப்படியே இருக்கிறது" எனவும் விமர்ச்சனம் செய்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில் திமுக இளைஞர் அணி சார்பில் பதிப்பகம் தொடங்கப்பட்டதை அறிமுகம் செய்தார்.  முத்தமிழ் அறிஞர் பதிப்பகம் சார்பாக தயாரிக்கப்பட்ட முதல் புத்தகமான மு.க.ஸ்டாலின் 2020 என்ற புத்தகத்தையும் வெளியிட்டார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்ய முதல் கையெழுத்து போடப்படும் என்றும் அத்துடன் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
Published by:Ram Sankar
First published: