கோலிவுட் ஹீரா... வாரிசு அரசியல்வாதி.. உதய் பயோடேட்டா!

கோலிவுட் ஹீரா... வாரிசு அரசியல்வாதி.. உதய் பயோடேட்டா!

உதயநிதி ஸ்டாலின்

தமிழச்சி தங்கபாண்டியனை அழகான வேட்பாளர் என தனக்கே உரித்தான ஹியூமருடன் பேசி தொண்டர்களை மத்தியில் க்ளாப்ஸ்களை அள்ளினார் உதய்.

 • Share this:
  தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி போட்டியிடுவதை தி.மு.க தலைவர் ஸ்டாலின் உறுதி செய்தார்.

  உதயநிதியை பலருக்கும் நடிகராகத்தான் தெரியும். முதலில் உதய் ஒரு பிசினஸ் மேன். அதன் பின்னர்தான் தயாரிப்பாளர், நடிகர் எல்லாம். உதயநிதி முதலில் ஆர்வம் காட்டியது பிசினஸில் தான். சென்னையில் பவுலிங் செண்டரை தொடங்கினார். விஜய் நடித்த குருவி படத்தை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். அவரது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் அதன்பின்னர் பல படங்களை தயாரித்தது. அதன்பின்னர் அவரே நடிகராக அவதாரம் எடுத்தார். ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலம் நடிகரானார். அதிகம் ரிஸ்க் எடுக்காமல் காமெடி டிராக்கை கையிலெடுத்து ஹிட் கொடுக்க தொடங்கினார்.

  உதயநிதி ஸ்டாலின்


  அவ்வப்போது தாத்தா கலைஞர், அப்பா ஸ்டாலின் பிரச்சாரங்களில் தலையைக்காட்டத் தொடங்கினார் உதய். அப்போதெல்லாம் அரசியல் குறித்த கேள்விகளுக்கு மெல்ல புன்னகைத்துவிட்டு கடந்து செல்வார். ‘அரசியலில் நானா காமெடி பண்ணாதீங்க பாஸ்.. கலைத்துறையில் எனக்கான இடத்தை பிடிக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்..’என்பதே அவரின் பதிலாக இருந்தது.

  2019-ம் ஆண்டு இளைஞரணி செயலாளர் பதவி உதயநிதியை வந்து சேர்ந்தது. 31 வயதில் ஸ்டாலின் கைக்கு வந்த பதவி 41 வயதில் அவரது மகன் உதயநிதியின் கைக்கு வந்தது. ஸ்டாலின் அந்த பதவியை அடைய கடுமையாக உழைத்திருந்தார். அதனால் ஸ்டாலினுக்கு இளைஞரணி செயலாளர் பதவி கொடுத்தபோது கட்சிக்குள் பெரிய அளவில் எதிர்ப்புகள் இல்லை. உதயநிதி பொறுப்புக்கு வந்ததில் கட்சியினருக்கு அதிருப்தி இருந்தாலும் யாராலும் எதுவும் பேச முடியவில்லை. நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது தமிழகம் முழுவதும் உதயநிதி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தமிழச்சி தங்கபாண்டியனை அழகான வேட்பாளர் என தனக்கே உரித்தான ஹியூமருடன் பேசி தொண்டர்களை மத்தியில் க்ளாப்ஸ்களை அள்ளினார் உதய்.

  உதயநிதி ஸ்டாலின்


  நாடாளுமன்றத் தேர்தலின் போது உதயநிதியின் செயல்பாடுகளும் , பிரச்சாரங்களும் பேசப்பட்டது. உதயநிதிக்கு இந்த பொறுப்பு வழங்குவதற்கு ஏதுவாக இளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் வெள்ளகோயில் சாமிநாதன். இதனையடுத்து உதயநிதியை இளைஞரணி செயலாளர் ஆக்கும் படலம் வேகமெடுத்தது. 2019-ல் உதயநிதி இளைஞரணி செயலாளர் பொறுப்பு வந்தார்.

  நீட், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தை இளைஞரணி சார்பில் முன்னின்று நடந்தினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தப்பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்கிறது அறிவாலய வட்டாரம். இந்நிலையில் தான் உதய்க்கு சேப்பாக்கம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கலைஞர் குடும்பத்தில் இருந்து மூன்றாம் தலைமுறை வாரிசாக உதயநிதி தேர்தல் களம் காண்கிறார்.

  வேட்பாளர் நேர்காணல் போது தாத்தாவின் தொகுதியான திருவாரூரில் போட்டியிடதான் விருப்பம், கட்சி பணிகளை மேற்கொள்ள சென்னையில் இருக்க வேண்டியுள்ளது. எனவே சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்ததாக கூறியதாக தகவல் வெளியானது. இதில் இருந்தே உதயநிதியின் அரசியல் தெளிவை அறியலாம்.
  Published by:Ramprasath H
  First published: