சட்டமன்ற தேர்தலில் முதல்வர் பழனிச்சாமிக்கும், பிரதமர் மோடிக்கும் முடிவுரை எழுத வேண்டும் - உதயநிதி

சட்டமன்ற தேர்தலில் முதல்வர் பழனிச்சாமிக்கும்,  பிரதமர் மோடிக்கும் முடிவுரை எழுத வேண்டும் -  உதயநிதி

உதயநிதி ஸ்டாலின்

கோவை ராஜவீதியில் கோவை தெற்கு வேட்பாளருக்கு ஆதரவாக திமுக இளைரணி செயலாளர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.

  • Share this:
கோவை ராஜவீதியில் கோவை தெற்கு வேட்பாளருக்கு பிரச்சாரம் மேற்கொண்ட திமுக இளைரணி செயலாளர் உதயநிதி, சட்டமன்ற தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், மோடிக்கும் முடிவுரை எழுத வேண்டும் என தெரிவித்தார்.

கோவை ராஜவீதி தேர்நிலை நிலை பகுதியில் திமுக இளைரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கோவை தெற்கு வேட்பாளர் மயூரா ஜெயக்குமாருக்கு ஆதரவாக வாகன பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய உதயநிதி,இந்த தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், பிரதமர் மோடிக்கும் முடிவுரை எழுத வேண்டும் என தெரிவித்தார்.

அடுத்த 3 நாட்களுக்கு தூக்கத்தை பற்றி, சாப்பாட்டை பற்றி கவலை பட கூடாது என தெரிவித்த அவர், இது கலைஞருக்கும், மோடிக்கும் இடையேயான தேர்தல் எனவும் , இதில் கலைஞரை ஜெயிக்க வைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

திமுக தலைவரின் மகனாக இருந்து , கலைஞரான பேரனாக இருந்து் கேட்கின்றேன் என உதயநிதி ஸ்டாலின் தேர்நிலை திடலில் கோவை தெற்கு காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
Published by:Vijay R
First published: