எம்.எல்.ஏ வருவாருன்னு பார்த்தா சாத்தூரே வந்திருக்கு - டிடிவி தினகரன் பேச்சு

எம்.எல்.ஏ வருவாருன்னு பார்த்தா சாத்தூரே வந்திருக்கு - டிடிவி தினகரன் பேச்சு

டிடிவி தினகரன்

“நாங்கள் அண்ணாவின் ஆட்சி அமைப்போம்" என ஸ்டாலின் போல் மிமிக்ரி செய்து கிண்டல் பண்ணினார் டிடிவி தினகரன்.

  • Share this:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதனையடுத்து பேசிய தினகரன், “எங்கள் கூட்டணி கட்சியில் உள்ள ஒவைசி பெயர் தமிழகத்தில் ரஜினிகாந்த் பெயர் போல் நன்றாக தெரிந்திருக்கிறது. தீய சக்தியான திமுக-வை எதிர்க்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் அவர்கள் உருவாக்கிய அ.தி.மு.க-வை மீட்டெடுக்க உருவாக்கப்பட்ட கட்சி தான் அ.ம.மு.க. நிச்சயம் மீட்டெடுப்போம். தீய சக்தியான தி.மு.க-வை ஆட்சியில் அமர விடாமல் தடுப்போம்

பாண்டிச்சேரியில் ஒழிந்திருக்கிறோம் என கூறினார்கள் கொரோனோ காலத்தில் மற்றவர்களை போல் முகத்தை காட்டிக்கொண்டு அலைய எனக்கு தெரியாது.
இந்த கூட்டணி அனைத்திற்கும் பொதுவானவர்கள் கூட்டணி. ஜனயநாயக முறையில் அ.தி.மு.க-வை மீட்டெடுக்க உருவாக்கிய இயக்கம் தேர்தலுக்கு பிறகு நிச்சயம் மீட்டெடுக்கும் அதை சாத்தூர் எம்.எல்.ஏ தொடங்கியிருக்கிறார்.

சாத்தூர் எம்.எல்.ஏ மட்டும் வருவார் என நினைத்தோம் அந்த மாவட்டமே வந்துவிட்டது. இது தான் ஆரம்பம். தேர்தல் முடிந்தவுடன் பண மூட்டைகளை விட்டு விலகி உண்மையான அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைவார்கள். அதிமுக மீட்டெடுக்கப்படும். தேர்தல் அறிக்கையில் சும்மா பேச்சுக்கு 1000,1500 கொடுப்போம் என அனைவரையும் ஏமாற்ற நான் விரும்பவில்லை “என்றார்.

“நாங்கள் அண்ணாவின் ஆட்சி அமைப்போம்" என ஸ்டாலின் போல் மிமிக்ரி செய்து கிண்டல் பண்ணினார். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போகிறார்கள் என அ.தி.மு.க-வை விமர்ச்சனம் செய்தார்.யார் யார் மாமியார் வீட்டுக்கு போவார்கள் என தெரியும் எனவும் டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Published by:Ramprasath H
First published: