அமமுக-வின் 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அமமுக பொதுச் செயலளார் டிடிவி தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுகிறார்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அமமுக வெளியிட்ட நிலையில் தற்போது 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. 50 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை அமமுக தற்போது வௌயிட்டுள்ளது. கோவில்பட்டி தொகுதியில் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூவை எதிர்த்து டிடிவி தினகரன் போட்டியிடுகிறார்.
இதேப்போன்று எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து பூக்கடை என்.சேகர் போட்டியிடுகிறார். தேனி போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து எம்.முத்துசாமி போட்டியிடுகிறார்.
சாத்தூர் தொகுதியில் அதிமுக கட்சியிலிருந்து விலகிய ராஜவர்மனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வில் சீட் கிடைக்காததால் ராஜவர்மன் அதிமுக-விலிருந்து விலகி அமமுக-வில் இணைந்தார்.