• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • திரிணாமுல் காங்கிரஸ் ஒரு பிரைவெட் லிமிடெட் கம்பெனி! - பா.ஜ.க-வினர் விமர்சனம்

திரிணாமுல் காங்கிரஸ் ஒரு பிரைவெட் லிமிடெட் கம்பெனி! - பா.ஜ.க-வினர் விமர்சனம்

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

காணொலி மூலமாக பேசிய அமித் ஷா, மேற்கு வங்கத்தை அனைத்துத் துறைகளிலும் பின்னுக்குத் தள்ளிய மம்தா பானர்ஜியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.

  • Share this:
    தமிழ்நாடு, மேற்குவங்கம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இதனால், அந்தந்த மாநிலங்களின் அரசியல் களங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. பிரதான கட்சிகள் பலவும் ஒன்றை ஒன்று கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மம்தா பானர்ஜியை பா.ஜ.க-வைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி விமர்சித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்தநிலையில், ஹவுராவில் உள்ள துமுர்ஜலா மைதானத்தில் பா.ஜ.க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திரிணாமுல் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்த ரஜிப் பானர்ஜி, பைஷாலி டால்மியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் காணொலி மூலமாக பேசிய அமித் ஷா, மேற்கு வங்கத்தை அனைத்துத் துறைகளிலும் பின்னுக்குத் தள்ளிய மம்தா பானர்ஜியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.

    பா.ஜ.க-வின் முக்கிய பிரமுகரான சுவேந்து அதிகாரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசுகையில், ``திரிணாமுல் காங்கிரஸ் இனி ஒரு கட்சி அல்ல. பிரைவெட் லிமிடெட் கம்பெனி. பிப்ரவரி 28-ம் தேதிக்குள் அந்தக் கம்பெனியில் இருந்து அனைவரும் வெளியேறி விடுவார்கள்” என்றார். மேற்கு வங்கத்தின் முன்னால் அமைச்சரான சுவேந்து அதிகாரி கடந்த டிசம்பர் மாதம் பா.ஜ.க-வில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ram Sankar
    First published: